• July 27, 2024

அகத்தியர் எழுதிய அகத்திய நூலை அடுத்து எழுதப்பட்ட தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் எப்போது பார்ப்போமா?

 அகத்தியர் எழுதிய அகத்திய நூலை அடுத்து எழுதப்பட்ட தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் எப்போது பார்ப்போமா?

Tolkāppiyam

தமிழில் முதல் நூலாக அறியப்பட்ட அகத்தியம், அகத்திய முனிவரால் எழுதப்பட்டது. எனினும் இந்த நூல் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை என்பதால் தமிழில் முதல் இலக்கண நூலாக தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை கூறி வருகிறோம்.

தொல்காப்பியத்தை பொறுத்தவரை மொத்தம் 1610 நூற்பாக்கள் உள்ளது. தமிழ் இலக்கணத்தை மிக சீரும் சிறப்புமாக எடுத்து இயம்பக் கூடிய வகையில் இந்த நூல் விளங்குகிறது.

இந்த நூலில் பழந் தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கம் போன்றவை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருப்பதால் தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் நூலாக தொல்காப்பியம் திகழ்கிறது என்று கூறலாம்.

Tolkāppiyam
Tolkāppiyam

தொல்காப்பியம் ஏறக்குறைய பொ.ஊ.மு.21ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. இந்த நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறலாம். மேலும் மரியாதை நிமித்தமாக இவரை தொல்காப்பியர் என்று அழைத்திருக்கிறார்கள்.

மேலும் வேத வியாசர் காலத்துக்கு முன்பே தொல்காப்பியம் எழுதப்பட்டது என்று கூறுகிறார்கள். அதாவது இன்று சொல்லப்பட்டிருக்கும் நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேத காலங்களுக்கு முன்பே தொல்காப்பியம் உள்ளது என்று ஒரு சாரார் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

மேலும் சிலர் தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று கூறி வருகிறார்கள். அதாவது மக்கள் இரும்பு, பொன் முதலிய உலோகங்களை கண்டுபிடித்ததற்கு பின்பு இது எழுதப்பட்டிருக்கலாம்.  ஏனெனில் தொல்காப்பியத்தில் உலோகங்கள் பற்றிய குறிப்புகள் கூறப்பட்டிருப்பதால், அதன் பின் தோன்றி இருக்கலாம் என்று சிலர் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

Tolkāppiyam
Tolkāppiyam

வேறு சிலரோ தொல்காப்பிய காலம் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஏனெனில் இந்த காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்ட உள்ளது‌. மேலும் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிட்ட காலத்தில் இது எழுதப்பட்ட இருக்க வேண்டும். எனவே 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சிலர் கூறுகிறார்கள்.

இன்னும் சிலரோ தொல்காப்பிய காலம் 2400 ஆண்டுகளுக்கு முந்தையதுதான். ஏனெனில் பாணினி இலக்கணத்திற்கு முன்பிருந்த ஐந்தரை இலக்கணத்தை படித்தவர் தொல்காப்பியர். எனவே பாணினி காலத்திற்கு முன்னரே வாழ்ந்தவராக இவர் இருக்க வேண்டும். இந்த பாணினியின் காலம் கிபி நான்காம் நூற்றாண்டு என்பதால் நான்காம் நூற்றாண்டுக்கு முன்னவராக தொல்காப்பியர் இருந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே எப்படி பார்த்தாலும் தமிழனின் பெருமையை பறைசாற்றக்கூடிய அற்புத நூலான தொல்காப்பியம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றுகிற வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.


1 Comment

  • தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️

Comments are closed.