• September 8, 2024

“குண்டு ரெட்டியூர் குகைகளில் பழங்கால பிராமி தமிழ் எழுத்துக்கள்..!” – தமிழர்களின் பெருமையை தட்டித் தூக்க தொல்லியல் துறை தயாராகுமா?

 “குண்டு ரெட்டியூர் குகைகளில் பழங்கால பிராமி தமிழ் எழுத்துக்கள்..!” – தமிழர்களின் பெருமையை தட்டித் தூக்க தொல்லியல் துறை தயாராகுமா?

Reddiyur

கி.பி14 ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களால் திருவன புரம் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது திருப்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் இந்த பகுதியை நன்னன் சேய், நன்னன் என்ற மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

இந்த ஊரானது ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலை பகுதியில் அமைந்துள்ளதால் இந்தப் பகுதியை மலைகளால் சூழப்பட்ட பகுதி என்று கூட கூறலாம். எனவே தான் இந்த பகுதிக்கு திருப்பத்தூர் என்ற பெயர் வந்துள்ளது.

Reddiyur
Reddiyur

இங்குள்ள ஜவ்வாது மலையில் எண்ணற்ற ஆறுகள் குறிப்பாக செய்யாறு, ஆரணியாறு, கமண்ட ஆறு, நாகந்தி ஆறு, மிருகண்ட ஆறு போன்றவை உற்பத்தி ஆகிறது. மேலும் இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், நீரோடைகள் பசுமையான காடுகளை கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த திருப்பத்தூர் மாவட்டமானது பழம் கற்கால முதல் புதிய கற்காலம், பெருங்கற்காலம், பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள் காலத்தைச் சேர்ந்தவர்கள் விட்டுச் சென்ற எண்ணற்ற தடயங்களை கொண்டுள்ளதாக தமிழ் துறையைச் சேர்ந்த உதவி பேராசிரியர் பிரபு தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து 10 ஆண்டுகளில் இங்கு 90 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் திருப்பத்தூரில் இருக்கும் குண்டு ரெட்டியூர் பகுதியில் பல தொல்லியல் தடையங்களை இவர்கள் கண்டறிந்ததாக கூறியிருக்கிறார்கள்.

Reddiyur
Reddiyur

இந்த குண்டு ரெட்டியூர் ஆனது திருப்பத்தூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏலகிரி மலையின் பின்பக்க பகுதியில் அமைந்துள்ள ஒரு அடிவார பகுதியாகும். இந்தப் பகுதியில் கிபி 10 ,11 ஆம்  நூற்றாண்டை சேர்ந்த ஐந்து நடுகற்களை கண்டுபிடித்து, அதில் நான்கு நடு கற்கள் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கிறார்கள்.

2018 ஆம் ஆண்டு குண்டு ரெட்டியூரில் இவர்கள் செய்த ஆய்வின் போது சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மண்பானை ஓடுகள் இருப்பதை கண்டறிந்துள்ளார்கள். மேலும் அவற்றை சேகரித்து சுத்தம் செய்து பார்த்தபோது அது பழமையான ஓடுகள் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவர்களின் கால ஆய்வில் சுடுமண் ஊது ஊழல்கள், கருப்பு சிவப்பு பானையோடுகள், சிவப்பு வண்ண பூச்சு உடைய பானை ஓடுகள், உடைந்த கெண்டிகல், கழுத்தில் அணியக்கூடிய ஆபரணத்தின் மணிகள், புதிய கற்கால கருவிகள், எலும்பு துண்டுகள் போன்றவை நிலத்தை உழவுப் பணியை மேற்கொண்ட போது கிடைத்ததாக கூறியிருக்கிறார்கள்.

Reddiyur
Reddiyur

அது மட்டுமல்லாமல் எந்த பகுதியில் இருக்கும் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருப்பதாக கூறிய பிரபு, அவற்றில் இரண்டு வகைகளை ஆய்வு செய்ததாகவும் கூறி இருக்கிறார். சுமார் பத்து பேர் தங்கி வசிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும், இந்த குகையின் முன் பெரிய கல்லில் உணவுப்பொருட்களை அரைத்த தடம் உள்ளது என்றும், குகையின் முகப்பில் பூர்வ அமைப்பு செதுக்கப்பட்டுள்ளதாகவும், பழமையான தமிழ் பிராமி எழுத்துக்களை போல தோற்றம் கொண்ட குறியீடுகள் உள்ளதாகவும் கூறுகிறார்.

அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்பானை ஓட்டில் குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த குகையை மக்கள் செமிக்கல் என்று அழைக்கிறார்கள். குகைக்கு அருகில் ஒரு பாறையில் விளையாடுவதற்கு பயன்படும் கட்டங்களும் செதுக்கப்பட்டுள்ளது.

Reddiyur
Reddiyur

அதுமட்டுமல்லாமல் மலையின் அடிவாரத்தில் நான்கு குத்து கற்கள், ஐந்து அரவை கற்கள், ஒரு கற்கோடாரி என பத்து புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதே போல் வேலூரில் உள்ள செங்குன்றம் என்ற கிராமத்தில் கள ஆய்வு செய்த போது கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருக்கிறார்.  கருப்பு சிவப்பு வண்ண மட்கல ஓடுகள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு கல்திட்டை (DOLMONOID CIST)  கல் பதிக்கை (SLAB CIST) கல்வட்டம் (CAIRN CIRCLE) போன்றவை கிடைத்துள்ளது.

எனவே இந்த பகுதியை தொல்லியல் துறையைச் சார்ந்தவர்கள் அகழ்வாய்வு செய்யும்போது, தமிழர்களின் தொன்மை கண்டிப்பாக வெளிப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.