• October 6, 2024

உலகின் மிகவும் மர்மமான புத்தகமாக இது..! Codex Gigas

 உலகின் மிகவும் மர்மமான புத்தகமாக இது..! Codex Gigas

கிறிஸ்தவர்களின் புனித நூலாக கருதப்படும் பைபிள் குறித்து நாம் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் இந்த உலகத்தில் ‘சாத்தானின் பைபிள்’ என்று ஒரு புத்தகம் உள்ளது. இதனை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

இந்த உலகின் மிகவும் மர்மமான புத்தகமாக இது கருதப்படுகிறது. ஏனெனில் இப்புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே சாத்தானின் உருவம் உள்ளது. மற்ற பக்கங்களிலும் அந்த உருவங்களே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மர்மமான பேய் புத்தகம் ‘கோடெக்ஸ் கிகாஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த உலகின் மிக ஆபத்தான புத்தகமாகவும் இது கருதப்படுகிறது. ஏனெனில் இந்த புத்தகம் யாரால் எழுதப்பட்டது..? ஏன் எழுதப்பட்டது என்பது குறித்த மர்மத்திற்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

இப்புத்தகம் தற்போது ஸ்வீடனில் உள்ள நூலகத்தில் பாதுகாக்கபப்ட்டு வருகிறது. மனிதர்களின் மனதில் உள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த புத்தகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பேய் புத்தகம், பேப்பர் பக்கங்களினால் ஆனது அல்ல, தோல் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பக்கங்களை கொண்டுள்ளது.

160 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் மிகவும் கடினமானதாக இருக்கின்றன. சுமார் 85 கிலோ எடை கொண்ட இந்த புத்தகத்தை தூக்க குறைந்தது 2 பேர் தேவை என்றும் கூறப்படுகிறது. இந்த புத்தகம் ஒரே இரவில் எழுதப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.

இந்த புத்தகம் உருவானது குறித்து ஒரு கதையும் கூறப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி ஒருவர், தனது துறவற சபதங்களை மீறிவிட்டாராம். அதனால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாம். மரண தண்டனையில் இருந்து தப்பிக்க, அந்த துறவி, ஒரே இரவில் தான் ஒரு புத்தகத்தை எழுதுவதாக உறுதியளித்துள்ளார். எல்லா மனித அறிவைக் கொண்ட ஒரு மடமாக அப்புத்தகம் இருக்கும் என்றும் அவர் கூறினாராம்.

ஆனால் ஒட்டுமொத்த புத்தகத்தையும் அவர் ஒருவரால் மட்டும் எழுத முடியவில்லையாம்.. அதன்பிறகு சிறப்பு பிரார்த்தனைகளை செய்து, ஒரு பேயை அழைத்து உதவி கேட்டாராம்.. தனது ஆன்மாவிற்கு பதிலாக அந்த புத்தகத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அந்த பேயிடம் வேண்டினாராம். அதற்கு ஒப்புக்கொண்ட பேய், ஒரே இரவில் அந்த புத்தகத்தை எழுதியதாம்.

இதை வீடியோவாக பார்க்க ????