• July 27, 2024

சரித்திரத்தில் இடம் பிடித்த விக்ரம் லேண்டர்..! நிலவின் தென் துருவத்தை வசப்படுத்திய இந்தியா..! – சந்திரயான் 3 சாதித்தது..

 சரித்திரத்தில் இடம் பிடித்த விக்ரம் லேண்டர்..! நிலவின் தென் துருவத்தை வசப்படுத்திய இந்தியா..! – சந்திரயான் 3 சாதித்தது..

Chandrayaan-3

உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் சந்திரயான் 3 விண்கலமானது கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஆந்திராவில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவுக்கு ஏவப்பட்டது.

இந்த விண்கலமானது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பொருட்டு சுமார் ₹615 கோடி செலவில் 40 நாட்கள் பயணத்திட்டத்தோடு, நமது நிலவு பற்றிய கனவுகளை நினைவாக்கும் நோக்கத்தோடு அனுப்பப்பட்ட விண்கலம் ஆகும்.

Chandrayaan-3
Chandrayaan-3

நிலவின் தென் துருவத்தை பற்றி அதிக அளவு விஷயங்கள் தெரியாத நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவி சுற்றுப்பாதையை சுற்றி வந்த பிறகு, நிலவின் வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டு,பின் படிப்படியாக அதன் சுற்று வட்ட பாதை குறைக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரயான் 3 -ல் இருந்த  விக்ரம் லேண்டர் கருவி தனியாக பிரிக்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் திக்.. டிக்.. நிமிடங்கள் உருவாகி நாடே மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இந்த நிமிடத்திற்காக காத்திருந்தது என கூறலாம்.

இந்த சூழ்நிலையில் இன்று மாலை 6:04 மணி அளவில் லேண்டர் ஆனது, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்க உள்ளது. இதனை அடுத்து இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் 3 குழுவினர்கள், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் அனைவரும் இந்த நிகழ்வினை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

Chandrayaan-3
Chandrayaan-3

நிலவுக்கு மேலே 30 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டர் இறங்கும் போது அதை நிலவில் தரை இறக்குவதற்கான முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளுவார்கள். அப்போது அது நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை அடுத்து லேண்டரின் வேகமானது பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் தரையிறங்கும்.

எனவே நிலவை நெருங்கக்கூடிய லேண்டரின் கடைசி ஏழு நிமிடங்கள்.. இந்தியாவிற்கு உலகிலேயே மிகச் சிறந்த அந்தஸ்தை கிடைக்கக்கூடிய நிகழ்வாகவும் அமைய உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் நிலவின் மேற்பரப்பில் ரோவர் தரை இறங்கி விட்டால், அது நிலவின் மணல் பகுதியில் நமது தேசியக்கொடியில் இருக்கும் அசோக் சின்னத்தை பதிவு செய்வதோடு அதில் நமது இஸ்ரோவின் லோகோவும் இடம்பெறும் செயல்  மகத்தான வரலாற்றுச் சாதனையாகும்.

Chandrayaan-3
Chandrayaan-3

சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெற தமிழகம் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்  செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் சந்திரன் மூன்றிலிருந்து விக்ரம் லேண்டெர் சிறப்பான முறையில் நிலவில் தர இறங்கி மகத்தான சாதனையை படைத்து உலக அரங்கில் இந்தியாவின் பெயரை நிலை நிறுத்தி விட்டது.

ரோவர் நிலவில் தரை இறங்கிய பின் 3 மணி நேரம் கழித்த ரோவரில் இருக்கும் வாகனம் வெளியே வந்து நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யக்கூடிய பணிகளை மேற்கொள்ளும்.

Chandrayaan-3
Chandrayaan-3

இந்த வெற்றி நிகழ்வினை தொடர்ந்து நமது பாரதப் பிரதமர் இந்த திட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டியதோடு, ஒரு மிகப்பெரிய சாதனையை இந்தியா நிகழ்த்தி உள்ளது. உலக அரங்கில் தற்போது நமது பாரத நாடு தலை நிமிர்ந்து நிற்பதாக பேசி இருக்கிறார்.

நாட்டிலுள்ள அனைத்து இந்திய மக்களும் பெருமிதத்தோடு, இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள் மேலும் அடுத்த கட்ட பணிகளிலும் இந்த சந்திரயான் 3 நமக்கு வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும்.

சந்திர மாமாவை எட்டிப் பிடித்திருக்கும் இந்தியர்களின் கனவு தற்போது நினைவாகிவிட்டது.