“சப்ஜா விதைகள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!”- மறக்காமல் யூஸ் பண்ணுங்க…

subja seed
இன்று பெரும்பாலான மக்கள் அனைவரும் சப்ஜா விதைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த விதைகளை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை நாம் பெற முடியும். பார்ப்பதற்கு மிகவும் சிறிதான அளவில் இருக்கக்கூடிய இந்த சப்ஜா விதை உடல் ஆரோக்கியத்திற்கு மிக பக்கபலமாக உள்ளது.
இந்த விதைகளை நீங்கள் நேரடியாக சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற பயன்கள் ஏற்படுகிறது. அப்படி என்னென்ன பயன்கள் இதன் மூலம் நமக்கு கிடைக்கிறதே என்பதை விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சப்ஜா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு ஆசிட் அதிக அளவு காணப்படுகிறது. இது நம் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து கொழுப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்தை தடுத்து நிறுத்துவதோடு உடல் எடையை பராமரிக்கவும் உதவி செய்கிறது.
மேலும் இதய நோயாளிகளுக்கு உற்ற நண்பனாக இருக்கக்கூடிய இது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய தன்மை உள்ளதால், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த விதையை ஊற வைத்து நீரிலோ, மோரிலோ கலந்து பருகலாம்.

இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் கால்சியம் சத்து குறைவாக இருக்கக்கூடியவர்கள் தங்களது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால் கட்டாயம் கால்சியம் நிறைந்த இந்த சப்ஜா விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். அத்தோடு இந்த விதைகளை உண்பதின் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான மினரல்கள் போதுமான அளவு கட்டாயம் கிடைக்கும்.
நார் சத்து அதிகம் இருக்கக்கூடிய இது உங்கள் குரலுக்கு ஆரோக்கியத்தை தர வல்லது பசி தன்மையை குறைத்து விடக்கூடிய இதனை நீரிழிவு நோயாளிகள் உண்பதின் மூலம் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவி செய்யும்.

இந்த விதைகளில் பாலி பினால் அதிக அளவு காணப்படுவதால் புற்றுநோயை தடுத்து நிறுத்தக்கூடிய தன்மை இந்த விதைகளுக்கு உள்ளது.பிளேவனாய்டுகள் அதிகம் கொண்ட இந்த சப்ஜா விதைகளை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.
வாரத்துக்கு ஒரு முறையாவது சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சப்ஜா விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் பல மடங்காக அதிகரிக்கும் என்பதை உணர்ந்து இன்றி சப்ஜா விதைகளை வாங்கி பயன்படுத்துங்கள்.