யார் இந்த அஸ்வினி குமாரர்கள்? – இவர்களுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்?

Ashwini kumars
ரிக் வேதத்தில் பகிரப்பட்டு இருக்கக்கூடிய இந்த அஸ்வினி தேவர்கள் அற்புதமான சக்தியை படைத்தவர்கள். இரட்டையர்களான இவர்கள் நோயாளிகளை குணப்படுத்துவதில் வல்லவர்களாக திகழ்ந்தது உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேவர்கள் ஏதேனும் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் அவர்களை விரைந்து சென்றும் காப்பாற்றக்கூடிய அற்புத ஆற்றல்மிக்க அஸ்வினி தேவர்கள் யார்? அவர்களுக்கும் சூரிய பகவானுக்கும் என்ன சம்பந்தம் என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அஸ்வினி தேவர்களில் ஒருவரின் பெயர் “நாசத்ய” அதாவது அசத்தியம் இல்லாத நபர் என்று பொருள்படும். அதுபோலவே மற்றொருவர் பெயர் “தஸ்ரா” இந்த பெயரின் பொருள் ஆனது ஒளி வீசக்கூடிய தன்மை பொருந்தியவர் என்பதாகும்.
இந்த அஸ்வினி தேவர்கள் இவர்களுடைய தேரில் சூரியனையும் சந்திரனையும் ஏற்றி செல்வது போல் தேனையும் ஏற்றி சென்று இருக்கிறார்கள். வேத காலத்தில் இவர்கள் மிகப்பெரிய மருத்துவராக இருந்திருக்கிறார்கள். உடைந்த காலை கூட ஒட்ட வைக்கக்கூடிய உன்னத ஆற்றல் மிக்க சக்தியை அஸ்வினி குமாரர்கள் பெற்றிருந்தார்கள்.
துருக்கி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் கிமு 1380 ஆம் ஆண்டு அஸ்வினி தேவர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. மேலும் இவர்கள் பற்றிய குறிப்புகள் மித்ர, வருண, இந்திரன் உடன் காணப்படுகிறது.

இந்த அஸ்வினி குமாரர்கள் குதிரை முகத்தை கொண்டு இருந்தவர்கள். சிவபெருமான் மற்றும் விஷ்ணுவிடமிருந்து ஆயுர்வேத வைத்திய முறைகளை அறிந்து அவற்றுக்கான விளக்க உரையை எழுதிய தட்ச பிரஜாதிபதிக்கு உபதேசம் செய்தவர்கள்.
நோயில் மனிதர்களை இறக்க விடாமல் இருக்கின்ற அற்புத சக்தியான பிரம்ம வித்யாவை கற்றறிந்த இவர்கள் இந்தக் கலையை கற்க விரும்பிய இந்திரனுக்கு அதை கற்றுக் கொடுக்க விரும்பாத காரணத்தால் கோபம் கொண்டு அஸ்வினி குமாரர்களின் தலையை வெட்ட பின் அவர்களுக்கு குதிரை தலையை பொருத்தியதாக வரலாற்றில் கூறப்படுகிறது.
கடலில் தத்தளிப்பவர்களையும், தீயில் மாட்டிக்கொண்டவர்களையும் காப்பாற்றக்கூடிய பணியை இந்த அஸ்வினி குமாரர்கள் செய்வதாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. தேவர்களுக்கும், மக்கள்களுக்கும் முதல் மருத்துவர் இவர்கள் தான்.

உலகில் எந்நேரமும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய பணியை அஸ்வினி குமாரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை நாம் மனதில் நினைத்தாலே நினைத்தது நடக்கும். அவர்களது ஆசீர்வாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முறையை முதல் முதலில் உருவாக்கியவர்கள் இந்த அஸ்வினி குமாரர்கள் தான்.
மேலும் இந்த அஸ்வினி குமாரர்கள் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் 376 இடங்களில் கூறப்பட்டுள்ளது. அஸ்வினி நட்சத்திரமாக வானில் ஒளி வீசும் தன்மை பெற்றவர்கள். இவர்கள் 27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரக்கூடிய நட்சத்திரம் இது தான். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக கேது பகவான் விளங்குகிறார்.
இந்த அஸ்வினி குமாரர்கள், சூரிய பகவானுக்கும் சரண்யு தம்பதிகளுக்கும் மகனாக பிறந்தவர்கள் என்று வேதம் கூறுகிறது. இப்போது உங்களுக்கு யார் அஸ்வினி குமாரர்கள் சூரியனுக்கும் இவர்களுக்கும் உள்ள சம்பந்தம் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ளது என்பது தெளிவாகப் புரிந்து இருக்கும்.