• July 27, 2024

 “அமெரிக்க ஆதிக்கத்தை அடியோடு அழிக்க பிரிக்ஸ்..!” – ரஷ்யா, இந்தியா, சீனா சாதிக்குமா?

  “அமெரிக்க ஆதிக்கத்தை அடியோடு அழிக்க பிரிக்ஸ்..!” – ரஷ்யா, இந்தியா, சீனா சாதிக்குமா?

BRICS

உலகில் மிகப்பெரிய வல்லரசாக திகழக்கூடிய அமெரிக்காவின் ஆதிக்கத்தை அடியோடு கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பாக பிரிக்ஸ் விளங்குமா? என்பது இனிவரும் காலங்களில் நமக்கு எளிதில் விளங்கிவிடும்.

தற்போது ஐந்து நாடுகள் மட்டுமே இந்த அமைப்பில் இருக்கிறது. இதனை அடுத்து மேலும் 11 நாடுகள் இந்த அமைப்பில் இணைய உள்ளதால், அமெரிக்காவின் ஆட்டத்தை ஒடுக்க ரஷ்யா, சீனா, இந்தியா வகுத்திருக்கும் வியூகமாக இது இருக்குமா? என்ற கேள்வியை பலரின் முன் பிரிக்ஸ் ஏற்படுத்தி விட்டது.

BRICS
BRICS

பிரிக்ஸ் இந்த விரிவாக்கமானது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்று சீனாவை சேர்ந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்திருப்பது உலகின் ஒட்டுமொத்த நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஏற்கனவே இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் இணைந்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் எகிப்து, சவுதி அரேபியா, அரேபிய எம்ரய்டுகள், அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா போன்ற நாடுகள் வரும் ஜனவரி மாதம் முதல் உறுப்பினர்களாக இணைய உள்ளது.

உலகின் அமைதியை பாதுகாக்க இந்த அமைப்பு உறுதுணையாக இருக்கும். கூறிய நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடுவதாக விளங்கும். மேலும் மேற்கத்திய நாகரிகத்திற்கு எந்த ஒரு நாடும் தற்போது அடிபணிய விரும்பவில்லை என்பதை இந்த அமைப்பு உணர்த்துகிறது.

BRICS
BRICS

அமெரிக்க, ஐரோப்பிய சக்திகளை நம்பாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வளர்ச்சி பாதையில் செல்ல இந்த நாடுகள் திட்டமிட்டு உள்ளது. இதனை அடுத்து பிரிக்ஜ் அமைப்பில் மேலும் பல புதிய நாடுகள் இணைய உள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆளுமைகளை இவை கட்டுப்படுத்துமா?

மேலும் இந்த அமைப்பில் இருக்கும் ரஷ்யா தற்போது நடந்து வரும், உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் தங்களை பழிதீர்க்க நினைக்க இருப்பதால் அந்த அச்சத்தின் காரணமாக இந்த அமைப்பில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ரஷ்ய அதிபர் உரை ஆற்றி இருக்கிறார்.

மேலும் இந்த உரையில் மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதோடு, இந்த அமைப்பில் மேலும் பல நாடுகள் இணைவதன் மூலம் அந்த நாடுகளில் சுதந்திரம், வலிமை படுத்தப்படும் என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

BRICS
BRICS

அதாவது இதில் இருக்கும் உறுப்பு நாடுகள் அனைத்தும் யாருடைய வற்புறுத்தல் மற்றும் ஆதிக்கத்திற்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என்று மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அமெரிக்காவை பங்கம் செய்த ரஷ்ய அதிபர் பற்றி அமெரிக்கா கவலை பட்டதா? என்றால் பிரிக்ஸ் அமைப்பு பற்றி எந்த விதமான கவலையோ அச்சமோ? அமெரிக்காவுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை.

BRICS
BRICS

அடுத்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இதன் மூலம் அமெரிக்காவின் எந்த ஒரு கட்டமைப்பையும் பிரிக்ஸ் மூலம் எதுவும் செய்து விட முடியாது. இது அமெரிக்காவுக்கு எதிரான ஒரு புவிசார் அரசியல் போட்டி தான் என கூறியுள்ளார்.

எனவே இனி வரும் காலங்களில் இதில் இணையக்கூடிய நாடுகளின் தரத்தை பொறுத்து பிரிக்ஸ் என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் காலம் கட்டாயம் நமக்கு பதில் அளிக்கும்.