• September 10, 2024

Tags :தமிழ்

“அழிந்து போனது” என்று நினைத்த மொழி மீண்டும் வந்தது எப்படி? அர்வி மொழி

2008-ம் ஆண்டு, 26 வயது மாணவர் முகமது சுல்தான் பக்வி, வேலூர் அரபு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள், லப்பீன் கப்ருஸ்தான் பள்ளியில் தொழுகை நடத்திவிட்டு, வீடு திரும்பும்போது, முற்றத்தை துடைக்கும் ஒரு மனிதரை பார்த்தார். அந்த மனிதர், வறண்ட கிணற்றருகே, காகித துண்டுகள், இலைகளை எரித்துக்கொண்டிருந்தார். அந்த எரிந்த காகிதங்களில் ஒரு பக்கம் காற்றில் பறந்து வந்து பக்வியின் முகத்தில் விழுந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அது ஒரு புத்தகத்தின் பக்கம் என்பதை அறிந்தார். பக்விக்கு […]Read More

தினமும் இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கை டாப் கியரில் போகும்..

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் வெற்றியோடு தொடங்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யார்? ஆனால், காலையில் படுக்கையை விட்டு எழுவதுவே போராட்டமாக இருக்கும்போது, வெற்றி எப்படி சாத்தியம்? கவலை வேண்டாம்! சில எளிமையான பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம், உங்கள் நாளை வசந்தமாக்கி, வெற்றியோடு முடிக்கலாம். நன்றியுணர்வுடன் நாளை தொடங்குங்கள்: (Be Grateful) உங்கள் வாழ்வில் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். கண் விழித்ததற்கு, உங்களைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கும், சுவாசிக்கக் காற்றுக்கும் நன்றி […]Read More

மூத்த தேவி, இன்று நாம் திட்டும் மூதேவி ஆனது எப்படி?

தவ்வை என்பவள் யார் என்பதை பாகம் 1-ல் பதிவில் பார்த்தோம். சங்ககாலத்தின் மூத்த தெய்வம், இன்று அமங்கலத்தின், அழுக்கின் உருவமாக பார்க்கப்படுகிறது. வரலாற்றில் தெய்வமாக வணக்கப்பட்டவள், இன்று எப்படி ஒரு திட்டும் வார்த்தையாக மாறிப்போனால் என்பது இன்றுவரை பதில் கிடைக்காத ஒரு கேள்வி. இருப்பினும் இந்த கேள்விக்குள் இருக்கும் ஒரு சூழ்ச்சியை இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம். தமிழர்களின் தாய் தெய்வமான தவ்வையின் சிலையை சுற்றி, கழுதை, தொடப்பம், காக்கை ஆகிய மூன்றும் எப்பொழுதும் இருக்கும். இவை […]Read More

தமிழரின் மூத்த தெய்வம், மூத்தத் தாய் யார் தெரியுமா?

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பது ஒரு திரைப்படத்தில் இருக்கும் வசனம். ஆனால் இறைவன் ‘இயற்கையில் தான் இருக்கிறான்’ என்பது தமிழனின் சங்ககால சத்தியம். தமிழன் என்றாலே இந்துக்கள் என்ற ஒரு போலிச்சாயம் இன்று இருக்கும் நிலையில், சங்ககால தமிழர்கள் இயற்கையைதான் இறைவனாக வணங்கினார்கள். உலகின் மூத்தநாகரீகமாய் இருக்கும் தமிழனின் சமூகத்தில், தமிழர்களின் முதல் கடவுள் யார் என்கிற கேள்வி ஒரு மிக பெரியப் பதிலை பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கிறது. தோண்ட தோண்ட கிடைக்கும் சிலைகள் […]Read More