• June 7, 2023

BiggBoss 4- ல் ரியோ!

 BiggBoss 4- ல் ரியோ!

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக மக்களின் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வந்தது. இந்த வருடம் கொரோனா வருடமாக ஆன காரணத்தால் எங்கு பிக்பாஸ் இல்லாமல் போய்விடுமோ என்று மக்கள் சோகமாக இருந்த தருணத்தில், கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸ் 4 நிகழ்ச்சி இருக்கும் என்று விஜய் டிவியின் புரோமோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

Rio Raj with actor Kamal hassan

பிக்பாஸ் போட்டியாளர்கள் எப்பொழுதுமே மக்களிடையே பிரபலமான, சமுதாயத்தில் முக்கியமானவர்களாகவும், அவ்வபொழுது கவர்ச்சிக்காக சில பேரையும் தேர்ந்தெடுப்பதும் உண்டு.  அந்த நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் என்கின்ற கேள்வி மக்களிடையே எழுந்து வரும் நிலையில்,  பிரபல சின்னத்திரை நடிகரும், பெரிய திரை நடிகருமான ரியோ அவர்கள் பங்கு பெறுகிறார் என்கின்ற செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் இதைப்பற்றி பிக்பாஸ் சார்பாகவும் ரியோ  சார்பாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை என்றாலும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து ரியோ அவர்கள் பிக்பாஸில் இருப்பார் என்று தெரியவருகிறது.


Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator