• June 6, 2023

சூரரைப்போற்று வெளிவருமா?

 சூரரைப்போற்று வெளிவருமா?

சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சூரியா தனது அடுத்த படமான ‘சூரரை போற்று’ திரைப்படத்தை Amazon Prime-ல், அக்டோபர் 30 ஆம் தேதி OTT தளத்தில் வரும் என்பதை அறிவித்தார். இதை குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள்,

“நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் OTT வெளி வருவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், இது விஷயமாக யார் யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளது.

இதில் திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை குறித்தும், பட வெளியீட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், ஆன்லைன் டிக்கெட் மற்றும் VPF குறித்தும் நிரந்தர தீர்வுகாண திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட நடிகர்கள், உள்ளிட்ட தரப்பினரும் அமர்ந்து பேசி எல்லோருடைய கருத்தையும் அறிந்து சுமூகமான நல்ல முடிவினை எடுத்து, அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்தி, திரை உலகம் செழிக்க திரையரங்கு உரிமையாளர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் திரைப்படம் Amazon Prime-ல் வருமா? வராதா? என்கிற நிலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.


Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator