“ஒளிபுகும் ட்ரான்ஸ்பரென்ட் தலை, குழாய் வடிவ கண்கள் பேரல் ஐ (Barrel Eye) – கடலில் உலா வரும் மர்ம மீன்..
விஞ்ஞானிகளை ஆச்சரியம் அடையக்கூடிய வகையில், இந்த உலகில் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு வகையான குண அதிசயங்களோடு உயிர் வாழ்ந்து வருவதைப் பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது.
அந்த வகையில் தற்போது ஆழ் கடலில் மர்மமான உருவ அமைப்போடு உலா வரும் பேரல் ஐ (Barrel Eye) என்ற மீனின் அதிசயத்தக்க உடல் அமைப்பைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பேரல் ஐ (Barrel Eye) இந்த மீனானது மேக்ரோ பின்னா மைக்ரோஸ்டோமா (Macropinna microstoma) என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த மீனின் கண்களை பொறுத்தவரை வெளிப்புறத்தில் அமையாமல் உள்புறத்தில் அமைந்திருப்பதினால் இது ஒலி உணர் திறன் கண்களை கொண்டுள்ளது என்று கூறலாம்.
மேலும் இதன் தலையில் திரவம் நிறைந்த கவசம் ஒன்று உள்ளது. இந்த கவசத்திற்குள் தான் அதன் கண்கள் அமைந்துள்ளது. இந்த மீனின் கண்களானது குழாய் வடிவ கண்களைக் கொண்டிருப்பதால் பார்ப்பதற்கு பிரகாசமான பச்சை நிற லென்ஸ்களை கொண்டுள்ளது.
மேலும் பார்ப்பதற்கு ஒரு டிரான்ஸ்பரன்ட் ஹெல்மட்டை போட்டிருப்பது போல் தெரியக்கூடிய இதன் தலைப்பகுதி மற்ற மீன்களின் வரிசையில் இருந்து வேறுபட்ட அமைப்பை கொண்டுள்ளது.
பொதுவாக உணவை தேடி இந்த மீன் போகும் போது இதன் கண்கள் மேல் நோக்கி காணப்படும் இதை வைத்துக் கொண்டுதான் இந்த மீன் முன்னோக்கி செல்கிறது. மேலும் மீனின் வாய்க்கு மேலே இரண்டு புள்ளிகள் உள்ளது. இதனை நரேஸ் என்று கூறுகிறார்கள். இந்த உறுப்புகள் ஆனது மனிதனின் நாசியை போல் உள்ளது என்பதால் இதனை ஆல்ஃபாக்டரி உறுப்பு என கூறலாம்.
மேலும் இதனுடைய குழாய் வடிவ கண்கள் இரையை உற்றுப் பார்க்க உதவி செய்கிறது. ஆழ் கடல்களில் வசிக்கக் கூடிய இந்த மீனானது Opisthoproctifdae குடும்பத்தைச் சேர்ந்தது.
இந்த மீன்கள் பொதுவாக மேற்பரப்பில் இருந்து சூரிய ஒளி மறையும் சமயத்தில் கருமையாக மாறும் தன்மை கொண்டது. அப்படி கருமையாக மாற கூடிய சமயத்தில் தன்னுடைய அல்ட்ரா சென்சிட்டி குழாய் கண்கள் மூலம் உணவு தேடுதல் வேட்டையில் ஈடுபட இந்த கண்கள் உதவி செய்கிறது.
மத்திய கலிபோர்னியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மீன்கள் ஏறக்குறைய 600 முதல் 800 மீட்டர் ஆழம் உள்ள பகுதிகளில் வாழக்கூடிய தகவமைப்பை கொண்டுள்ளது.
கடலில் வாழக்கூடிய மற்ற உயிரினங்களின் உடல் அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கக்கூடிய, இந்த மீனானது மர்மங்களை அதிகளவு கொண்டிருக்கும் மீனாக ஆராய்ச்சியாளர்களின் மத்தியில் தற்போது விளங்குகிறது.
எனவே இந்த மீன்களை பற்றி மேலும் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது இன்னும் பல மர்மங்கள் அவிழ வாய்ப்புகள் உள்ளது என்று கூறலாம். உங்களுக்கும் இந்த மீனை பற்றி ஏதாவது தகவல் தெரிந்திருந்தால் கட்டாயம் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.