• July 27, 2024

நம்மிடமிருந்து வெள்ளையன் கொள்ளை அடித்த தொகை எவ்வளவு தெரியுமா? – 3,50,00,00,00,00,00,000..

 நம்மிடமிருந்து வெள்ளையன் கொள்ளை அடித்த தொகை எவ்வளவு தெரியுமா? – 3,50,00,00,00,00,00,000..

British

கள்ளிக்கோட்டை வழியாக வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் நம்மை மெல்ல மெல்ல சுரண்டி கொள்ளை அடித்த தொகை என்ன? என தெரிந்தால் நீங்கள் மலைத்துப் போவீர்கள்.

அதுமட்டுமா.. அடப்பாவி என்று மனதார பல வகைகளில் சாபத்தையும் தந்து விடுவீர்கள். 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையன் நமது இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் சுரண்டி தின்றான் என்பது வரலாறு அறிந்த உண்மை.

British
British

அதுமட்டுமா, நமது முன்னோர்கள் செய்து வைத்த விலை மதிப்பற்ற இந்திய கடவுளை சிலைகள், கலை சிற்பங்கள், ஓவியங்கள், புராதான சின்னங்கள், கோகினூர் வைரம், அபூர்வ வைர கற்கள், அணிகலன்கள், திப்புசுல்தானின் வாள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் வெள்ளையன் என்ற கொள்ளையன் நம்மிடையே இருந்து எடுத்துச் சென்று இங்கிலாந்து மகாராணிக்கு பரிசாக கொடுத்த பொருட்கள்.

இன்றளவும் உயர்ந்த பொருட்கள் இங்கிலாந்து மகாராணியின் அரண்மனையையும், கோடீஸ்வர பிரபுக்களின் வீடுகளிலும், அருங்காட்சியகத்திலும் நமது பெருமையை பறைசாற்ற கூடிய பொருட்கள் சிறைப்பட்டு கிடைக்கிறது.

British
British

கிழக்கு இந்திய கம்பெனி என்ற பெயரின் மூலம் நமது ஆட்சி அதிகாரத்தை அபகரித்து நம்மை சுரண்டிச் சென்ற தொகை பற்றி பொருளாதார அறிஞர் உத்சா தனது ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பை கொலம்பியா யூனிவர்சிட்டியில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த கட்டுரையில் தான் வெள்ளையன் நம்மிடம் இருந்து 45 ட்ரில்லியன் யூ எஸ் டாலர் மதிப்புக்கு நிகரான தொகையை சுரண்டி சென்று இருக்கிறார் என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

British
British

இதில் ஒரு ட்ரில்லியன் என்பது பிரிட்டிஷ் கணக்குப்படி 100 கோழி அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி என வரும். நீங்கள் 35 க்கு பின்பு 14 பூஜ்ஜியத்தை இதற்காக போட வேண்டும்.

அந்த வகையில் தற்போது பிரிட்டனின் நடப்பு ஆண்டு ஜி டி பி எனப்படும் ஒட்டுமொத்த உற்பத்தியே மூன்று பில்லியன் டாலருக்கு குறைவாக உள்ள வேலையில் நம்மிடம் இருந்து சுரண்டிய மதிப்பை பாருங்கள்.

வரலாற்றுப் பக்கங்களில் மறக்க முடியாத கரையாக இருக்கக்கூடிய இந்த தொகையில் ஒரு சிறு பங்கை இந்தியாவிற்கு தந்திருந்தால், இன்று நமது நாடு வல்லரசாகவும் தொழில்நுட்பத்திலும் சிறந்திருக்கும் பணக்கார நாடுகளில் நம் நாடும் ஒன்றாக மாறி இருக்கும்.

British
British

அதுமட்டுமல்ல ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா கூட இந்தியாவிலிருந்து சுரண்டிய பணத்தால் தான் தங்களது நாடுகளில் வளர்ச்சி கட்டமைப்பை மிகப்பெரிய அளவு உயர்த்திக்கொள்ள முடிந்தது என்ற வரலாற்றில் சொல்லப்படாத உண்மையை உத்ஷா மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறார்.

அநியாய வரிகளை போட்டு மக்களை நெருக்கடியில் தள்ளி எத்துணை பணத்தையும் பிரிட்டிஷ் அரசு கிழக்கு இந்திய கம்பெனி என்ற பெயரில் கையாடல் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.