ரோட்டில் சிதறிய டாலர் நோட்டுக்கள் !!! அள்ளிக்கொண்ட மக்கள் !!!

திடீரென மேலே இருந்து பண மழை கொட்டி அதை அனைவரும் எடுப்பது போன்ற காட்சி ‘சிவாஜி’ திரைப்படத்தில் வைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை நினைவு கூறும் வகையில் ஒரு சம்பவம் கலிபோர்னியாவில் நடந்துள்ளது.
கலிபோர்னியாவில் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் அலுவலகத்திற்கு ஒரு Truck மூலம் டாலர் நோட்டுகள் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இவ்வாறு பணத்தை எடுத்துச் செல்லும்போது truck-ன் கதவுகள் சரியாக பூட்டப் படாததால் தானாகவே திறந்து உள்ளே இருந்த சில பணப் பைகள் ரோட்டில் விழுந்துள்ளது. கீழே சிதறிய பண நோட்டுகளில் பெரும்பாலும் ஒரு டாலர் மற்றும் 20 டாலர் நோட்டுகள் எக்கச்சக்கமாக ரோட்டில் சிதறியது.
அந்த நெடுஞ்சாலை வழியே பயணம் செய்து கொண்டிருந்த மக்கள் அனைவரும் தங்களது கார்களை நிறுத்தி விட்டு கீழே சிதறிக் கிடந்த டாலர் நோட்டுகளை எடுத்து தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். ஒரு சிலர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கீழே சிதறிக் கிடந்த இந்த டாலர் நோட்டுகளை எடுத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த நோட்டுக்கள் யார் யாரிடம் இருக்கின்றதோ அதை அரசாங்கத்திடம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கொடுக்க வேண்டுமென கலிபோர்னியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
அதுமட்டுமின்றி இந்த நோட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் விவரம் ஏதும் தெரிவிக்காமல் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலிபோர்னியா அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் மூலம் எத்தனை டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கலிபோர்னியா அரசு ரகசியமாக வைத்துள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் படம்பிடித்த டெமி பாக்பி என்பவர் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெமி பாக்பி பதிவிட்டுள்ள இச்சம்பவம் குறித்த வீடியோ அடங்கிய இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.