• May 19, 2024

நீங்கள் விரும்பி சாப்பிடும் பிரியாணி வரலாறு தெரியுமா?

 நீங்கள் விரும்பி சாப்பிடும் பிரியாணி வரலாறு தெரியுமா?

Biryani

நம்மில் பலருக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம் என கூறலாம். சுடச்சுட மணக்க மணக்க மசாலா வகைகளோடு செய்ய பாசுமதி அரிசியில் செய்யப்படும் பிரியாணிக்கு பலர் உயிரையே விட்டு விடுவார்கள். 


அந்நிய உணவான பிரியாணி எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அதன் வரலாறு என்ன என்று பார்க்கலாமா?

பிரியாணி பிறந்த இடம் பெர்சியா தற்போதைய ஈரான்.  பதினைந்தாம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மக்களுக்காக சமைக்கப்பட்ட உணவு இந்த பிரியாணி என்று சொல்லப்படுகிறது.


Biryani
Biryani

 எனினும் பிரியாணி பிறந்த இடம் பெர்சிய அல்லது அரேபியாவை என்று இன்னும் முடிவாகவில்லை. பிரியாணி என்ற சொல்லுக்கு பார்ஸி மொழியில் வறுத்த அல்லது வறுக்கப்பட்ட உணவு என்று பொருள். அந்த காலத்தில் நெய்யில் அரிசியை வறுத்து எடுப்பார்கள்.

 இதன் மூலம் அரிசி நன்றாக வறுக்கப்பட்ட மசாலா கலவையில் தான் சரியாக கலந்து கறி வகைகளை அரிசிக்கு இடையில் வைத்து வெந்தவுடன் ஒரு நல்ல சுவை தரும் உணவாக இதை படைத்தார்கள். 

மேலும் 1593 – 1631 ஷாஜகான் தன் மனைவி மும்தாஜின் அன்புக் கட்டளையின் பெயரில் தம் போர்வீரர்களுக்கு சீரான ஊட்டச்சத்து கிடைக்க சமைக்கப்பட்ட உணவு தான் இந்த பிரியாணி என்று சிலர் சொல்வதுண்டு. வடக்கில் இன்றைய லக்னோவில் முகலாயர்கள் சில காலம் ஆள அங்கிருந்து தான் பிரியாணி இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது.

Biryani
Biryani

பின்னர் டெல்லியில் இது முகல் பிரியாணி என்று இது பெயர் பெற்றது. 1856 கொல்கத்தாவை ஆண்ட நவாப் வாஜித் அலி ஷா மூலம் கல்கத்தா பிரியாணி உருவாகி பரவியது. 


தென்னிந்தியாவில் மைசூர் திப்பு சுல்தான் கோட்டையில் பல சைவ இந்து சமையல்காரர்கள் மூலம் வெறும் காய்கறிகளை கொண்டு தாகிரி பிரியாணி சமைத்து தென்னகம் முழுவதும் அதன் சுவையை அறிமுகப்படுத்தினர். 

அதே காலகட்டத்தில் தான் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம்  ஹைதராபாத் பிரியாணி என்றும் ஆற்காட்டு நவாபுகள் ஆற்காடு பிரியாணி என்றும் இந்தியா முழுவதும்  பரவவிட்டனர். 

கேரளத்தில் கோழிக்கோடு தலசேரி வழியாக படையெடுத்து வந்த நவாப்கள் அந்தப் பகுதிகளை சில காலம் ஆண்டனர். அங்கிருந்து தலச்சேரி பிரியாணி ஊரெங்கும் பரவியது. 


Biryani
Biryani

இதைத்தவிர கடலோர கர்நாடகாவில் கதக்களி பிரியாணி, மகாராஷ்டிராவில் பாம்பாய் பிரியாணி, ஜம்முவில் பாக் மீன் பிரியாணி, குஜராத்தில் மிமோனி பிரியாணி தமிழ்நாட்டில் திண்டுக்கல் பிரியாணி என பிரியாணி வகைகள் இந்தியா முழுதும் பரந்து விரிந்து பரவியுள்ளது.

இந்தியாவைத் தவிர சிலோன் பிரியாணி, பாகிஸ்தான் சிந்தி பிரியாணி, மலேசியன் பிரியாணி என கடல் கடந்தும் பிரியாணிகள் மக்களை ஆட்கொண்டுள்ளது. ஒரு சில பிரியாணி வகைகள் அந்தந்த ஊர்களில் உள்ள கடைகளின் மூலம் தனி ருசி ஏற்படுத்தப்பட்டு பிரபலமானவை.


இப்படி இந்தியா முழுவதும் பிரியாணி பரவி நம் அனைவரின் மனதை கொள்ளையடித்து உள்ளது.இது வரை பிரியாணி சாப்பிடாதவர்கள். இத்தனை வகை பிரியாணி கேட்ட  உடனேயே உங்கள் நாவில் எச்சில் ஊறுகிறது அல்லவா.