Comeback கொடுக்க களமிறங்கும் இந்திய அணி !!!

நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஒரு வேளை தோல்வியுற்றால் அரையிறுதிக்கு செல்வது கடினமாக இருக்கக் கூடும்.
இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பெரும் தோல்வியை தழுவியது. ஒரு வாரத்திற்கு பிறகு நியூசிலாந்துடன் தனது இரண்டாவது போட்டியை இந்தியா இன்று ஆடவுள்ளது. பாகிஸ்தானுடனான தோல்விக்கு பின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கையுடன் நாங்கள் மீண்டு வருவோம் என கூறியிருந்தார். இந்திய அணியின் பவுலிங் முதல் போட்டியில் சுமாராகவே இருந்தது.

ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறிய இந்திய அணிக்கு ஆறாவது பந்துவீச்சாளரின் உதவி தேவை என தெரிகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பயிற்சியின்போது பந்து வீசி பழகும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தது. இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இன்றைய ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்காக கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பாகிஸ்தானுடனான ஆட்டத்தை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட வேண்டும் என்பதே இந்திய வீரர்களின் எண்ணமாக இருக்கும்.

நியூசிலாந்து அணியும் பாகிஸ்தானுடன் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டம் இரவு 7:30 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெறும். முக்கியமான லீக் போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கு deep talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- தீய பலன்கள் தரும் கனவுகள் எவை எவை என தெரிந்து கொள்ளலாமா?..
- தமிழர் வழிபாட்டில் ஏழு கன்னிமார்கள் யார்? இவர்கள் தான் சப்த கன்னியரா?
- தாமரைத் தண்டில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்..! – இனி நீங்களும் யூஸ் பண்ணுங்க..
- “வயிற்றுப் பகுதியில் உணவு அப்படியே இருக்க..!” – ட்ரைலோபைட் புதை படிவம் கண்டுபிடிப்பு..
- தங்கத்தை ஏன் காலில் அணியக்கூடாது? மகாலட்சுமி என்பதாலா? – இல்லையெனில் உண்மை என்ன?
இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.