• September 9, 2024

ரொனால்டோ பாணியில் Coca Cola-வை வைத்து Mass காட்டிய வார்னர் !!!

 ரொனால்டோ பாணியில் Coca Cola-வை வைத்து Mass காட்டிய வார்னர் !!!

சமீபத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அங்கிருந்த Coca Cola பாட்டிலை தள்ளி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போலவே கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஒரு குறும்புத்தனமான சம்பவத்தை செய்துள்ளார்.

நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றியை ஈட்டியது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் 65 ரன்களை விளாசி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். இந்த போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வார்னரின் மேஜைக்கு முன் 2 Coca Cola பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது.

T20 World Cup: Warner recreates Ronaldo's $5.2 billion stunt, removes Coca- Cola bottles during press conference - VIDEO | Cricket - Hindustan Times

அந்த பாட்டில்களை தனது கையில் எடுத்து சிறிது நேரம் அதை உற்று நோக்கிய வார்னர் பின்னர், “ரொனால்டோவுக்கு இதை தள்ளிவைப்பது சரி எனில் எனக்கும் அது சரியே எனக் கூறினார்”. இதற்கு முன் ரொனால்டோ Coca Cola பாட்டில்களை தள்ளி வைத்து தண்ணீரை குடிக்க வலியுறுத்தியதன் விளைவாக Coca Cola நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வார்னர் இந்த பாட்டில்களை தனது கையில் எடுத்து பார்த்து மீண்டும் மேஜையில் வைக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் செய்த சம்பவம் அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.