• May 19, 2024

உலகிலேயே மிகச் சிறிய நாடு எது? – அதுவும் இத்தாலியில் உள்ளதா?

 உலகிலேயே மிகச் சிறிய நாடு எது? – அதுவும் இத்தாலியில் உள்ளதா?

Vatican City

உலகிலேயே மிகச் சிறிய நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த நாடானது இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்திருக்கும் ஒரு சுதந்திர நாடு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


உங்களுக்கு விடை என்ன என்பதை ஏறக்குறைய தெரிந்திருக்கும் நீங்கள் நினைப்பது போல தன்னாட்சி சார்புடைய வார்த்தைகள் நாடுதான் உலகிலேயே மிகச் சிறிய நாடு.

இந்த நாட்டின் மொத்த பரப்பளவில் 110 ஏக்கர் மட்டும்தான் இங்கு 2022 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 510 மட்டுமே.


Vatican City
Vatican City

இங்கு அமைந்திருக்கும் செயின் பீட்டர் பசிலிக்கா தேவாலயம் உலகில் மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலயமாக விளங்குகிறது. மேலும் இந்த தேவாலயத்தில் எண்ணற்ற ஓவியங்களும், சிலைகளும் காணப்படுகிறது.

இந்த நகரில் வங்கி என பார்க்கையில் ஐஆர் வங்கி உலகளாவிய நிதி பகிர்வு ஒரு குறிப்பிட்ட அங்கம் வகித்து வருகிறது. வாடிக்கன் நகரம் அதன் நாணயங்களை சொந்தமாகவே தயாரித்துக் கொள்கிறது.

Vatican City
Vatican City

ஐரோப்பியன் ஒன்றியத்தின் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றின் கீழ் 1999 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் யூரோ நாணயம் இங்கு பயன்பாட்டில் உள்ளது. மேலும் இங்கு அமைந்திருக்கும் அப்போஸ்தலித் நூலகம் மிகவும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

இந்த நூலகத்தில் 75 ஆயிரம் வகைகளில் 16 லட்சம் புத்தகங்கள் உள்ளது 1475 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலகத்தில் 40 மொழிகளுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


Vatican City
Vatican City

வாடிகன் நாடு யுனெஸ்கோபால் 1984 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இங்கு அஞ்சல் தலை விற்பனை, சுற்றுலா பொருட்களின் விற்பனை, அருங்காட்சிய நுழைவு கட்டணம், புத்தக விற்பனை போன்றவை இந்த நாட்டின் முக்கிய பொருளாதார வருவாயாக திகழ்கிறது.

இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் உலகின் மிகச்சிறிய நாடு வாடிக்கன், அதன் பொருளாதாரத்தில் எப்படி வளர்ந்து இருக்கிறது என்று. உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை குட்டி நாட்டிக்கு சென்று பார்வையிடலாம்.