• November 8, 2024

வாக்கு இயந்திரத்தை உருவாக்கிய தமிழ் எழுத்தாளர் !!

 வாக்கு இயந்திரத்தை உருவாக்கிய தமிழ் எழுத்தாளர் !!

தன் தனித்துவமான நாவல்களினாலும், திரைக்கதையினாலும் கலை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எழுத்தாளர் சுஜாதா. தமிழில் வெளியான பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதிய சுஜாதா தான் இன்று நாம் தேர்தலில் உபயோகிக்கும் மின்னணு வாக்கு இயந்திரத்தை தலைமை தாங்கி உருவாக்கியவர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

Sujatha Rangarajan's 83rd birthday today May 3

ஐ.ஐ.டியில் பொறியியல் படிப்பு முடித்த சுஜாதா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்று சொல்லப்படும் பெல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மின்னணு வாக்கு இயந்திரம் தயாரிக்கும் குழுவின் தலைவராக இருந்து தன் பொறியியல் அறிவினால் வாக்கு எந்திரத்தை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய வாக்கு இயந்திரத்தை 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் முதல் முறையாக உபயோகித்தது. இந்த இயந்திரத்தை உருவாக்கும் குழுவை தலைமை தாங்கி தேர்தல் ஆணையத்திற்கு உதவியதால் பெல் நிறுவனம் சார்பிலும், இந்திய அரசாங்கம் சார்பிலும் சுஜாதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இந்த எந்திரத்தை குறித்த விமர்சனங்களும் சந்தேகங்களும் தொடர்ந்து எழுந்த நிலையில் அதற்கு விடை அளிக்கும்படி கட்டுரை (article) ஒன்றை சுஜாதா வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் இந்த இயந்திரத்தின் துல்லியமான கணக்கெடுக்கும் திறனை பற்றியும், அதில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் விரிவாக விளக்கியிருப்பார்.

Electronic Voting Machine: Here's all you wanted to know about India's EVMs  - India News

மேலும் ஒரு எழுத்தாளனாக தன்னை நினைத்து பெருமை கொள்வது போல இந்த இயந்திரத்தை உருவாக்கியதற்காகவும் தன்னை நினைத்து பெருமை கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

சுஜாதா வடிவமைத்த இந்த மின்னணு வாக்கு எந்திரமானது இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அவரது எழுத்துக்களில் எந்த அளவு எளிமையும் புதுமையும் இருக்குமோ அதே அளவிற்கு அவர் வடிவமைத்த மின்னணு வாக்கு இயந்திரமும் எளிய மக்கள் உபயோகப் படுத்தும் வகையிலும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருந்தது.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள் !