• October 12, 2024

இரண்டாவது முறையாக தொடர்ந்து கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி !!!

 இரண்டாவது முறையாக தொடர்ந்து கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி !!!

நடந்து முடிந்த சையது முஸ்தக் அலி கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாடு அணி தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு வெற்றி வாகை சூடியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களுக்கு 151 ரன்கள் எடுத்து 152 ரன்களை இலக்காக தமிழ்நாடு அணிக்கு நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். மிடில் ஆர்டரில் சற்று தடுமாறிய தமிழ்நாடு அணிக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் ஆல்ரவுண்டர் ஷாருக்கான் களமிறங்கினார்.

Defending champion Tamil Nadu storms into SMAT final - DTNext.in

கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு இமாலய சிக்சர் அடுத்து ஷாருக்கான் தமிழ்நாடு அணிக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்தார். கடந்த முறை கர்நாடகா அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடிய போது கடைசி பந்தில் தோற்ற தமிழ்நாடு அணி தற்போது அதற்கு பெரும் வெற்றி மூலம் ஈடுகட்டியுள்ளது என்றே சொல்லலாம்.

ஷாருக்கானின் சிறப்பான ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்களும் பிரபலங்களும் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். ஷாருக்கான் 15 பந்துகளில் 33 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

Syed Mushtaq Ali Trophy final: Will remember last-ball six for a long time,  says Shahrukh Khan - Sports News

ஐ.பி.எல் போட்டிகளில் ஷாருக்கான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஒரு முக்கிய நட்சத்திர வீரராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு கிரிக்கெட் அணி இந்த கோப்பையை வென்றுள்ளதால் தமிழ் நாட்டு வீரர்களின் கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என விளையாட்டு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சையது முஸ்தக் அலி கோப்பையை வென்றுள்ள தமிழ்நாடு அணிக்கு deep talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.