![mcd](https://www.deeptalks.in/wp-content/uploads/2021/11/mcd.jpg)
உலகெங்கிலும் Mc Donalds நிறுவனத்திற்கு கோடிக் கணக்கான ஆர்டர்கள் ஒரே நாளில் வருவது வழக்கம். அந்த வகையில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை வெறும் நான்கு மணி நேரத்தில் அந்த நிறுவனத்தில் பணி புரியும் பெண் செய்து கொடுத்துள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை டிக்டாக் தளத்தில் அந்த பெண்மணி பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவின் படி வெறும் நான்கு மணி நேரத்தில் 3200 பர்கர்களுக்கும் 3200 Cookie-களுக்கும் ஆர்டர் வந்துள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த அனைத்து ஆடவர்களின் மதிப்பும் சுமார் 7000 டாலர் ஆகும். இந்திய மதிப்பின்படி 7000 டாலர் என்பது ஐந்து லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
![McDonalds, Adyar, Chennai, Chennai](https://d4t7t8y8xqo0t.cloudfront.net/resized/750X436/group%2F2996%2Fmenu020190801072342.jpg)
இந்த அனைத்து ஆர்டர்களும் ஜார்ஜியாவில் உள்ள ஒரு சிறையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Mc Donalds-ல் பணி புரியும் இந்தப் பெண்மணியின் வீடியோவானது சமூக வலைதளங்களில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.
Fast Food-ன் வளர்ச்சியும் மக்களிடையே அதற்கு இருக்கும் வரவேற்பும் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Mc Donalds-ல் பணிபுரியும் அந்தப் பெண் வெளியிட்ட டிக் டாக் வீடியோவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.