• December 3, 2024

10 முக கவசங்களை வைத்து உலக சாதனை !!!

 10 முக கவசங்களை வைத்து உலக சாதனை !!!

சமீப காலங்களில் வித்தியாசமான பல சாதனைகளை உலகெங்கிலும் உள்ள பலரும் நிகழ்த்தி கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் “இப்படியெல்லாம் ஒரு சாதனையா !!” என நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒருவர் முக கவசத்தை வைத்து உலக சாதனையை புரிந்துள்ளார்.

இந்த கொரோனா காலகட்டத்தில் பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் ஒரு முக்கியமான கருவியாக இருந்து வந்தது. அந்த முக கவசத்தை வைத்தே உலக சாதனை ஒன்றை நிகழ்த்த முடியும் என இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜ் ரீல் என்பவர் நிரூபித்துள்ளார்.

Boy wears 10 masks in 7.35 seconds, enters Guinness World Record - WATCH

கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜ் ரீலின் இந்த உலக சாதனையை வீடியோவாக பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஜார்ஜ் ரீல் 10 முக கவசங்களை வெறும் 7.35 நொடிகளில் அணிந்து அதிவேகமாக பத்து முக கவசங்களை அணிந்த மனிதர் எனும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த வீடியோவில் ஒரு மேஜை மீது 10 முக கவசங்களை வரிசையாக அடுக்கி வைத்து ஒவ்வொன்றாக அதை ஜார்ஜ் ரீல் தனது முகத்தில் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை நிகழ்த்தி முடித்துவிட்டு, “இதை நான் வேகமாக செய்து முடித்து விட்டேன்” என ஜார்ஜ் அந்த வீடியோவில் கூறுகிறார். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜார்ஜ் ரீலின் இந்த சாதனை பலருக்கும், சாதிக்க வேண்டும் என்று உறுதி இருந்தால் எந்த பொருளை வைத்து வேண்டுமானாலும் சாதனையை நிகழ்த்தலாம் என்பதை எடுத்துரைக்கிறது.

ஜார்ஜ் ரீலின் சாதனை வீடியோவை கீழே உள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.