• September 10, 2024

“விடுபடாத மர்மம்” 65 ஆண்டுகளாக தொடர்கிறது..! – மார்ட்டின் கேஸ்..

 “விடுபடாத மர்மம்”  65 ஆண்டுகளாக தொடர்கிறது..! – மார்ட்டின் கேஸ்..

martin-family

நியூயார்க் நகரத்தில் 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடும்பம் காருடன் மாயமானது. அந்த குடும்பம் பற்றிய தகவல்கள் இன்று வரை கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

 

எவ்வளவோ தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் சந்தித்திருந்தாலும் இந்த வழக்கை பொறுத்தவரை போலீசார் மட்டுமல்ல அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு சவால் விடக் கூடிய வகையில் இந்த மர்ம வழக்கு உள்ளது என்று கூறலாம்.

 

அப்படி என்ன மர்மம் இந்த வழக்கில் உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை போலீசார் ஒவ்வொரு ஆண்டும் தூசி தட்டி விசாரித்தாலும், அது பற்றிய தடையம் ஏதும் கிடைக்காததால் அப்படியே அதை க்ளோஸ் செய்து விடுகிறார்கள்.

martin-family
martin-family

1958 டிசம்பர் 6ஆம் தேதி அமெரிக்காவின் ஆரோகான் மாநிலத்தில் உள்ள கென்னத் மார்ட்டின் குடும்பத்தார் அனைவரும் கிறிஸ்மஸ் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர்.

 

இவரது மனைவி பாப்ரா மார்டின் மற்றும் 3 குழந்தைகளும் போர்ட்லேண்ட் நகரில் நடைபெற்ற ஒரு கிறிஸ்துமஸ் பாட்டில் கலந்து கொண்டனர் மூத்த மகளான ரொனால்ட் மார்ட்டின் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்து வந்தார்.

 

அந்த பாட்டியை முடித்துக்கொண்டு நள்ளிரவு கிணற்று குடும்பத்தார் வீடு திரும்பினார். வீடு திரும்புவதற்கு முன்பு அவர்கள் வீட்டிலும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலந்து பேசி இருக்கிறார்கள். இதன்படி அடுத்த தினமான டிசம்பர் 7ஆம் தேதி காலையில் அவர்கள் காரை எடுத்துக்கொண்டு பார்ட்டிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் சென்றார்கள்.

 

அதுவே அவர்கள் வீட்டில் இருந்த கடைசி நாள் என்று கூறலாம். அதன் பிறகு இவர்கள் வீடு திரும்பவில்லை. டிசம்பர் 9ஆம் தேதி வராததால் அவர்கள் அதிகாரிகள் போன் செய்து இருந்தபோது யாரும் போனை எடுக்கவில்லை. இதனை அடுத்து சந்தேகம் அடைந்து அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.

martin-family
martin-family

அவர்களின் வீட்டை சோதனை போட்ட பொழுது எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை. மேலும் அவர்கள் பொருட்களை வாங்க கடைக்கு சென்றது போல் தான் உள்ளது என்று முடிவு செய்து இருக்கிறார்கள். அடுத்த நாள் கடைவீதிக்கு சென்று விசாரித்த போதும் அவர்கள் கிறிஸ்மஸ்க்கு தேவையான பொருட்களை வாங்கியது தெரியவந்தது.

 

மேலும் அங்கிருந்த ரெஸ்டாரன்ட் ஒன்றில் அவர்கள் சாப்பிட்டதாக அங்கு வேலை செய்யும் சர்வர் கூறியதோடு இவர்கள் சாப்பிட்டு வெளியேறிய சமயத்தில் இரண்டு ரவுடிகள் அங்கிருந்து வெளியேறியதாக அந்த சர்வர் கூறினார்.

 

இந்த சூழ்நிலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஆற்றுக் கரையோரம் ஒரு ரத்தம் படித்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். ஒரு சமயம் பணத்திற்காக குடும்பத்தை கொலை செய்திருக்கலாம் என்று அவர்கள் அப்போது முடிவு செய்தார்கள். ஆனால் அந்த கணிப்பு தவறானது.

martin-family
martin-family

இதற்கு காரணம் கொலையாளிகளை அவர்கள் பிடித்த போது அவர்கள் மார்டின் குடும்பத்தை கொலை செய்யவில்லை என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியில் எந்த விதமான கை ரேகைகளும் இல்லை.

 

இதனை அடுத்து அருகில் இருந்த ஆற்றில் சிறுமியின் சடலம் கைப்பற்றப்பட்ட போது அது கென்னத்தின் குடும்பத்தாராக இருக்கலாம் என்று கருதிய பின்பு அவர்கள் ஒரு சமயம் அவர்கள் சென்ற கார் ஆற்றில் விழுந்து இருக்கலாம் என்று காரினை தேடி இருக்கிறார்கள்.

எனினும் சோனார் டெக்னாலஜியை பயன்படுத்தி தண்ணீரில் காரை தேடிய போதும் கார் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை இதனை அடுத்து போலீசார் விழி பிதுங்கினர். இந்த கார் கிடைத்தால் மட்டுமே மார்ட்டின் குடும்பத்தின் வழக்கு முடிவுக்கு வரும் அதுவரை இது மர்மமாகவே தொடரும்.