• July 27, 2024

“இன்று விண்ணில் பாயும் ஆதித்யா L1..!” – சூரியனை ஆய்வு செய்யும் இந்திய விண்கலம்..

 “இன்று விண்ணில் பாயும் ஆதித்யா L1..!” – சூரியனை ஆய்வு செய்யும் இந்திய விண்கலம்..

Aditya L1

இந்தியாவைப் பொறுத்தவரை என்று விண்வெளி ஆய்வில் அனைத்து நாடுகளையும் வாய்ப்பிளக்க வைத்து ஒரு அளப்பரிய சாதனையை செய்து விட்டது. நம்மாலும் நிலவில் கோலோச்ச முடியும் என்ற நிலையை இன்று உலக நாடுகளின் மத்தியில், நிலவின் தென் பகுதியை சந்திரயான் 3 அடைந்து விக்ரம் லாண்டரை தரையிறக்கி பிரக்யானைக் கொண்டு தென்பகுதி முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் நிலவில் இருக்கக்கூடிய தனிமங்கள் பற்றிய விஷயங்களை பிரக்யான் நமக்கு சிறப்பான முறையில் படம் பிடித்து அனுப்பியது. இதனை அடுத்து நிலவின் வெற்றியை தொடர்ந்து சூரிய கோளையும் ஆய்வு செய்ய ஆதித்யா L 1  இன்று ஏவப்பட உள்ளது.

Aditya L1
Aditya L1

இந்த ஆதித்யா L1 15 லட்சம் கிலோமீட்டரை 120 நாட்கள் பயணம் செய்து சூரியனை அடைய உள்ளது. இதற்காக ஆதித்யா L1 இன்று பிஎஸ்எல்வி- சி57 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்காக 24 மணி நேர கவுண்டன் துவங்கிவிட்டது.

இந்த விண்கலமானது 100 முதல் 120 நாட்கள் பயணம் செய்து   L1 சுற்றுவட்ட பாதையை அடைந்து சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது. இது இந்தியாவின் முதல் சூரிய விண்வெளி ஆய்வுக்கலன் என கூறலாம்.

Aditya L1
Aditya L1

சூரிய ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்ட ஆதித்யா எல் ஒன் மிஷன் ஒத்திகை மற்றும் ஒரு சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டது சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்ய இந்த விண்கலம் பேர் உதவியாக நமக்கு இருக்கும்.

மேலும் இந்த விண்கலத்தின் முக்கிய நோக்கமே சோலார் கொரோனா என்பது பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது தான். அதாவது சூரியனின் வெளிப்புற அமைப்பை சோதிப்பது. தற்போது நிலவின் பயணத்தை அடுத்து சூரிய பயணத்தை மேற்கொண்டு இருக்கும். இந்த மிஷன் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு இருக்கிறார்கள்.

Aditya L1
Aditya L1

இதை அடுத்து உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மேம்பட்ட வளர்ச்சியை பார்த்து வியப்புகள் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் மிக பெரிய அந்தஸ்தை எட்டிப்பிடித்திருக்கும் இந்தியா இந்த மிஷினில் வெற்றியடைந்தால் விண்வெளியில்  வேறு லெவலில் சாதித்து விட்டதாக நாம் மார் தட்டி கொள்ளலாம்.

உங்களுக்கும் ஆதித்யா L 1 மிஷின் பற்றி வேறு ஏதேனும் கருத்துக்கள் தெரிந்து இருந்தால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.