“சந்திரயான் 3 உடன் போட்டி போட்ட லூனா 25 ..!” – நிலவில் மோதி மண்ணை கவ்வியதா?..

Luna 25 crash
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியாவை போலவே ரஷ்யாவும் லூனா 25 என்ற விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலமானது இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் 3 – க்கு போட்டியாக கருதப்பட்ட நிலையில் லூனா 25 நிலை தற்போது என்ன என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
இந்திய விண்கலமான சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்கும் முன்பாகவே இந்த ரஷ்ய விண்கலமான லூனா 25 தரை இறங்கும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லூனா 25 விண்கலம் கட்டுப்பாடற்ற சுற்றுப்பாறையில் சுழன்று நிலவில் விழுந்ததாக அதிகாரிகள் அதிர்ச்சியான தகவல்களை கூறி இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த விண்கலமானது, தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கி நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு பல புதிய தகவல்களை சந்திரயான் 3க்கு முன்பே அனுப்பிவிடும் என்று எதிர்பார்த்த வேளையில் யாரும் எதிர்பாராத இந்த நிகழ்வு நடந்து உள்ளது.
மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த லூனா 25 தென் துருவத்தில் தரை இறங்குவதற்கு முன்பாக சுற்று பாதையில் நகர்ந்து கொண்டிருந்தபோதே தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டதாக ராஸ் காஸ்மோஸ் தெரிவித்தது.
இதனை அடுத்து தற்போது இந்த விண்கலமானது நிலவில் மோதியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ் காஸ்மோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

50 ஆண்டு காலத்திற்குப் பிறகு ரஷ்யா மேற்கொண்ட முதல் நிலவு பயணம் தற்போது தோல்வியை தழுவியுள்ளது என்று கூறலாம். உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற பல பொருட்கள் நிலவில் உள்ளதாக கருதி வரும் விஞ்ஞானிகள் அதன் ஒரு பகுதியை ஆய்வு செய்யக்கூடிய மிகச்சிறப்பான திட்டத்தில் ஒரு மிகப்பெரிய பின்னடைவை ரஷ்யா எட்டியுள்ளது.
ரஷ்ய நேரப்படி 14.55 மணிக்கு லூனா 25 விண்கலம் தரை கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை துண்டித்து விட்டது. இதனை அடுத்து இந்த விண்கலத்தோடு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது அந்த முயற்சிகள் பலன் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கிய செய்தியை, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ் மாஸ் தெரிவித்துள்ளது. என்ன காரணத்தினால் இந்த நிகழ்வு ஏற்பட்டது என்பது பற்றி தீவிரமான ஆய்வுகளில் தற்போது ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை அடுத்து வரும் நாட்களில் நிலவில் தரை இறங்க உள்ள சந்திரயான் 3 நிலைப்பாடு எப்படி இருக்கும்?. நமது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி விக்ரம் லேண்டெர் நிலவில் இறங்கி களப்பணியை மேற்கொண்டு செய்திகளை அனுப்புமா என்பது போன்ற கேள்விகள் தற்போது பலர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
இதற்கான விடை இன்னும் இரண்டு நாட்களில் நமக்கு தெரிய வரும். அது வரை காத்திருப்பதோடு விக்ரம் லேண்டெர் சீரிய முறையில் தரை இயங்கி கள ஆய்வுகளில் வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம்.