• April 11, 2024

துள்ளித் திரியும் தாமரை மொட்டு!

தன்னைத் தானே தேடிக்கொண்டு,துள்ளித் திரியும் தாமரை மொட்டு!காற்றில் கலையாத கனவுகள் கண்டுவானவில் வண்ணம் அள்ளிக்கொண்டு…தன் பாதையை தேடி பயணம் மேற்கொண்டுஇவ்வுலகை வென்றாள் தீயான நின்று! – இரா.கார்த்திகாRead More

பசலை போக்கு

நீயில்லா பொழுதுகளில்தொட்டாச்சிணுங்கியாகிப் போகிறதுமனமும் நினைவும் வா… வந்தென்பசலைப் போக்குயுகங்களாகுமென்இரவுகளைசூல் கொள்பிரசவிகக் காத்திருக்கிறேன்வா… வந்தென்பசலை போக்குRead More

கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!

கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!வானின் எல்லையை தொட,நீ வழிகளை தேடு! நீ விரும்பும் பாதையைநோக்கி நீ ஓடு!! யார் உன்னைத் தாழ்த்தினாலும்,அதை தவிர்த்து உன் தடத்தை நீ நாட்டு!!! சமானியனாய் வாழ்ந்து மாண்டு போவதை நீ தூக்கிப்போடு..பணம் உன்னை கீழே போட்டாலும்,உன் திறமையே உன்னை தாலாட்டும்..! – இரா.கார்த்திகாRead More

என் கையில் தவழும் கைபேசியே!

என் கண்களைத் திறந்து,இந்த நாட்டின் நடப்பையும்அறிய பல விஷயங்களையும்எனக்குக் கற்றுக் கொடுத்தது நீதான்! என்னைக் கையால் ஆக்கியதும் நீதான்!காதல் ஒன்றால் மட்டும் தான்,ஒரு மனிதனை முழுமனிதனாக்கி முன்னேற்றவும் அழிக்கவும் முடியும்!! நீயே என் காதல் கைபேசியே ! – இரா. கார்த்திகாRead More

விடைதேடி உயிர்வாழும் ஜீவன்!

கனவே நீ கைகூட நான் என்ன செய்வேனோ!கண்ணீரும் கதைச் சொல்ல நீ என் கையில் சேர்வாயோ!! உடல் மட்டும் உயிர் வாழ, உன்னைத் தேடி திரிந்தேனே!கனவே நீ சூரியனா!உன் ஒளிக்காக தவிக்கின்றகண்மணி நானும் தாமரையா!! நம்பிக்கை ஒன்றைத் தவிரஎன்னிடமும் ஒன்றும் இல்லை..என் கையில் சேர்வாயோஎன்னைத் தாங்கிச் செல்வாய்யோ!! – இரா. கார்த்திகாRead More

காதல் துளி!

தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!ஓடும் நதியின் ஓசை கேட்கவே,கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,தீயை மூட்டி தடம் ஒன்று செய்தேன்!!! விழிகளில் விழுந்த விதையெனமுளைத்தாய்…உணர்வினில் மதுரமாய் கலந்தெனைச் சாய்த்தாய்…! நீங்காமல் நீங்கியே சேராமல் சேர்வோம்;காதலின் உள்ளே மழையென பொழிவோம்! – இரா.கார்த்திகாRead More

துள்ளிக்குதித்த மனமே!

இரவில் பூத்த மல்லிகையை போல,தேனில் மூழ்கிய வண்டைப் போல,மழைத் தீண்டிய மயிலைப் போல,சூரியனால் மலர்ந்த தாமரையைப் போல,திருமாலைத் தரிசித்த ஆண்டாலைப் போல, உன்னை கண்டபின் மானைப் போலஎன் மனம் துள்ளிக் குதித்து ஓடியது! – இரா. கார்த்திகாRead More

காதல் பித்துப்பிடித்தவளாய் நான்!

கை அருகில் நீஇருந்தும் இல்லாமல் நான்…!!ஏதுவும் பிடிப்பதில்லைஅழைத்தாலும் செவிமடுக்கவில்லை;சொல்வதற்கு ஏதுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் சுவாசக் காற்றில்ஊசலாடும் இதயம்…! ‘நீதான்’ வேண்டும்அடம்பிடிக்கும் மனது…!கொடுக்கவியலா தூரத்தில் நீ…!ஸ்பரிசம் உணரா தவிப்பில் நான்…!!பெரிதாக ஒன்றுமில்லை..சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! கொடியாய் படர்கிறாய்மலராய் மணக்கிறாய்ஆலகால விஷமானவனே…!என் காதலில் குரூரம்… நீசொல்வதற்கு ஏதுமில்லை..!!சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் அருகாமைவேண்டி தவமிருக்கும் மனது;சாத்தியமாக்க வந்து சேர்….!இணைந்து மகிழப்போகும்வாழ்வின் நினைவுகளில்,வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…!!பெரிதாக ஒன்றுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!!Read More

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

ஒரு குழந்தை பிறக்கும் போதுதான், ஒரு அம்மாவும் அப்பாவுமே புதுசா பிறக்குறாங்க. ஒரு குழந்தையோட சேர்ந்து நாமளும் வளருறது தான் நல்ல குழந்தை வளர்ப்பு..! குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்த கணத்திலிருந்து நினைவில் கொள்ளவேண்டிய ஓர் அதிமுக்கியக் கடமை ஆகும். குழந்தை பிறந்து 10 வயது வரை அந்தக் குழந்தையைக் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டு, அதன்பிறகு திடீரென்று குழந்தை வளர்ப்பை நீங்கள் கையில் எடுத்தால், அக்குழந்தை உங்கள் வசப்படாது என்பதே உண்மை. குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். […]Read More

சிரிப்பால் சிறைப்பிடித்தாள்..

உன் முத்துப் பற்களால் நீ சிரிக்கஅதை பார்த்து என் மனம் பரிதவிக்க! உன் உதட்டோர புன்னகை என்னைக் கொல்லுதடி!அதை தொடர்ந்து என் கண்கள் செல்லுதடி!! என் மனம் கவர்ந்தவள் நீயடி..உன்னை பிரியும் நொடி என் மரணமடி!! – இரா. கார்த்திகாRead More