• June 7, 2023

Tags :தன்னம்பிக்கை

கவிதைகள்

சத்தமின்றி சாதனைகள் செய்வோம்!

வெடித்துச் சிதறிடும்வரை தான் எரிமலைவெடித்த பின்னே தரைமட்டமாகிதனிந்திடும் அதன் நிலை சீறிப் பாய்ந்திடும்வரை தான் கடலலைகரை தொட்ட பின்னே தன்னிலை மறந்தே பின்வாங்கிடும் அலை உயிர் கொண்டாடும்வரை தான் உடல் நிலைஉயிர் உதறிய பிறகுசொல்லவே தேவையில்லை மாற்றங்களை அப்படியேஏற்றுக் கொள்வோம்எங்கே தேவையோ அங்கே சாந்தமாய் செல்வோம் சத்தமின்றி சாதனைகள்செய்வோம்சாதனைகள் வழியேஉலகுள்ள வரை அழியாமல் வாழ்வோம்Read More

கவிதைகள்

இரு செவிகள் கேட்கும்படி பறை கொட்டுவோம்!

சாதியில்லா சமுதாயத்தை உருவாக்குவதுஇளைஞர்கள் கையிலே! மனிதன்,வீரத்திற்கு சிலை வைத்தான்,விடுதலைக்கு சிலை வைத்தான்,அழகுக்கு சிலை வைத்தான்,அறிவுக்கு சிலை வைத்தான், ஆனால்,அன்புக்கு சிலை வைக்கவில்லை,அன்பு ஓர் அற்புத உணர்வு!அது அனைத்து உயிர்களிடமும் உள்ளது… நிலத்தின் அடிப்படையாகநாடு பிரிக்கப்பட்டது,மொழியின் அடிப்படையாக,மாநிலம் பிரிக்கப்பட்டது, ஆனால்,மனிதனை அடிப்படையாக கொண்டு,எந்த மதமும், எந்த சாதியும் ,பிரிக்கப்படவில்லை என்பது, வெறும் கண்களால் காற்றைப்பார்ப்பதர்க்கு சமம்… அன்று எவனோ!திணித்த மூடநம்பிக்கை,சாதி, மதம், இனம்இவையெல்லாம் கலந்து,நம்மை களங்கப்படுத்துகிறதே! புள்ளிகள் இருந்தும்,கோலமிடமுடியாத, நட்சத்திரகூட்டங்களை போல,பல சாதிகள் கூட்டம், கூட்டமாக இருந்தும்..ஒன்று சேர்க்கமுடியாமல்,தவிக்குதே! […]Read More

கவிதைகள்

உன்னை நீ கேட்டுப்பார்!

மழையில்லாக் காட்டிடம் கேட்டுப்பார்வறட்சியின் வலி தெரியும்! பகையில்லா பிள்ளையிடம் கேட்டுப்பார்அன்பின் மொழிப் புரியும்! வீடில்லா விலங்கிடம் கேட்டுப்பார்வாழ்வின் வேதனை விளங்கும்! வாயில்லா பறவையிடம் கேட்டுப்பார்காற்றின் மொழி புரியும்! நீ உன்னையே கேட்டுப்பார் நீ யாரென்று உனக்கே தெரியும்உன் வலிமையும் புரியும்!Read More

Tamil Motivation

மனிதனை மனிதமாக மாற்றுவது நட்பே

உங்கள் நண்பரை பற்றி யாராவது உங்களிடம் சொல்லவந்தால், அவர்களிடம் இந்த 3 கேள்விகளை கேளுங்கள்! “என் நண்பன் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா?” “என் நண்பன் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா?” “என் நண்பரைப்பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா?” Read Full Article HereRead More

கவிதைகள்

இறை தேடல்

பொருளைத் தேடிபுகழைத் தேடிஉறவைத் தேடிஉரிமை தேடிஇளமை தேடிஇனிமை தேடிசுகத்தைத் தேடிசிரிப்பைத் தேடிபொன்னைத் தேடிமண்ணைத் தேடிவிண்ணைத் தொட்டும்…மண்ணில் விழுந்துகண்ணை விற்றும்ஓவியம் வாங்கிமுற்றுப் பெறாததேடலில் மூழ்கிமுத்தான வாழ்வைத்தொலைத்து மருகிசத்தம் நிறைந்தஅலை மனமாகிபித்தன் என்றேபிழையுற்று நின்றேன்! தேடல் முடிவில்…அடைவொன்றும் இல்லைநிறைவென்ற நிம்மதிநிகழவும் இல்லை!குழம்பி நிற்கையில்குரலொன்று கேட்டேன்…நகைப்பின் ஊடே அதுநலம் சொலக் கேட்டேன்! “முடிவுறும் தேடலில்நிறை தனைக் கண்டிடும்இடமது மறைபொருள்இறையது தானே!அதை…அடைந்திடும் வழியெனும்விடுகதை விளங்கிடசிரம் கொடு செவி மடுஅலையுறு மனமே!மறைபொருள் இறை தனைக்காட்டிடும் நிறைமதிதடுத்திடும் தளை தனைக்களைந்திடு மனமே! உடலொடு உயிர் தனைப்பிணைந்திடும் […]Read More

கவிதைகள்

துள்ளித் திரியும் தாமரை மொட்டு!

தன்னைத் தானே தேடிக்கொண்டு,துள்ளித் திரியும் தாமரை மொட்டு!காற்றில் கலையாத கனவுகள் கண்டுவானவில் வண்ணம் அள்ளிக்கொண்டு…தன் பாதையை தேடி பயணம் மேற்கொண்டுஇவ்வுலகை வென்றாள் தீயான நின்று! – இரா.கார்த்திகாRead More

கவிதைகள்

கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!

கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!வானின் எல்லையை தொட,நீ வழிகளை தேடு! நீ விரும்பும் பாதையைநோக்கி நீ ஓடு!! யார் உன்னைத் தாழ்த்தினாலும்,அதை தவிர்த்து உன் தடத்தை நீ நாட்டு!!! சமானியனாய் வாழ்ந்து மாண்டு போவதை நீ தூக்கிப்போடு..பணம் உன்னை கீழே போட்டாலும்,உன் திறமையே உன்னை தாலாட்டும்..! – இரா.கார்த்திகாRead More

கவிதைகள்

வாழ்க்கை

நம்பிக்கை + தன்னம்பிக்கை = வாழ்க்கை நிராகரிப்புகள் நிறைந்த வாழ்வில்வாழ்ந்து கொண்டு இருக்குறேன்..என் திறமை மீது நம்பிக்கை வைத்துஓடி கொண்டு இருக்கிறேன்..கஷ்டங்களை ஒதுக்கவும் இல்லை,நான் விற்பனையாக நடிக்கவும் இல்லை..எனக்கு பிடித்த வாழ்வில் நானாக நான் ….!Read More

கவிதைகள்

காத்திருப்போம்…!

சரியான இடம்!சரியான நேரம்!வரும்வரை உங்களை தீட்டி கொண்டு காத்திருங்கள்!! வாய்ப்பு வந்தால் வாழ்க்கை வரும்..அதுவரை நம் தன்னம்பிக்கையே மூலதனம்..Read More