• July 27, 2024

Day: November 22, 2021

நூதன முறையில் சிரித்து போராட்டம் நடத்திய மக்கள் !!!

சாலைகள் ஒழுங்காக கட்டமைக்கப்படாததற்கு மக்கள் வீதியில் இறங்கி போராடுவது வழக்கமே. ஆனால் சாலைகளை சீரமைக்க நூதன முறையில் ஒரு போராட்டத்தை போபால் மக்கள் கையாண்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 200 மீட்டர் நீளமுள்ள சாலை ஒன்று மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனை சீரமைக்க மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து […]Read More

இனி 10-ஆம் வகுப்பு சான்றிதழில் பயிற்று மொழியும் இடம்பெறும் !!!

தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20 சதவீதம் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பயிற்றுமொழி சேர்க்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வர்மா அறிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அரசு, அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு குறிப்பிட்ட இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு முனைப்பு காட்டி வந்தது. இந்நிலையில் சட்டசபையில் 20% தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. […]Read More

இரண்டாவது முறையாக தொடர்ந்து கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி !!!

நடந்து முடிந்த சையது முஸ்தக் அலி கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாடு அணி தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு வெற்றி வாகை சூடியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களுக்கு 151 ரன்கள் எடுத்து 152 ரன்களை இலக்காக தமிழ்நாடு அணிக்கு நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஹரி […]Read More