• October 5, 2024

Month: October 2021

Frooti Deal-க்கு Okay சொன்ன சுட்டி குரங்கு !!!

சமீப காலங்களில் விலங்குகள் செய்யும் குறும்புத்தனமான சம்பவங்கள் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு சுட்டித்தனமான குரங்கு செய்த குறும்புத்தனம் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ருப்பின் ஷர்மா எனும் ஐ.பி.எஸ் அதிகாரி இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் ஒருவரிடமிருந்து குரங்கு கண்ணாடியை பறித்துக்கொண்டு ஒரு கூண்டிற்கு மேல் அமர்ந்துகொண்டது. அந்த கண்ணாடியை வைத்து விளையாடிக் […]Read More

இந்த தீபாவளிக்கு சரவெடி வெடிக்க தடை !!!

இந்தியா முழுவதும் சரவெடி மற்றும் குறிப்பிட்ட ரசாயனத்தால் உருவாக்கப்படும் பட்டாசுகளை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இந்த தடையை பிறப்பித்துள்ளது. பட்டாசுகளால் காற்று மாசுபடுகிறது என பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழக்குப்பதிவு செய்து வந்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ரசாயன பட்டாசுகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கக்கூடிய பேரியம் எனப்படும் ரசாயனம் கலந்து தயார் […]Read More

Comeback கொடுக்க களமிறங்கும் இந்திய அணி !!!

நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஒரு வேளை தோல்வியுற்றால் அரையிறுதிக்கு செல்வது கடினமாக இருக்கக் கூடும். இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பெரும் தோல்வியை தழுவியது. ஒரு வாரத்திற்கு பிறகு நியூசிலாந்துடன் தனது இரண்டாவது போட்டியை இந்தியா இன்று ஆடவுள்ளது. பாகிஸ்தானுடனான தோல்விக்கு பின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கையுடன் நாங்கள் மீண்டு […]Read More

ரொனால்டோ பாணியில் Coca Cola-வை வைத்து Mass காட்டிய வார்னர் !!!

சமீபத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அங்கிருந்த Coca Cola பாட்டிலை தள்ளி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போலவே கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஒரு குறும்புத்தனமான சம்பவத்தை செய்துள்ளார். நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றியை ஈட்டியது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் 65 ரன்களை விளாசி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். இந்த போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது […]Read More

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் புனித் ராஜ்குமார் ! வைரலாகும் பழைய வீடியோ

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் அவரது உயிருக்கு உயிரான ரசிகர்களுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரது மறைவுக்குப் பின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை வெளியிட்டனர். அவரது ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றே சொல்லலாம். புனித் ராஜ்குமாரின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பிரபுதேவா, யாஷ் போன்ற […]Read More

ஆயிரம் அதிசயம் அமைந்தது சூப்பர் ஸ்டார் ஜாதகம் !!!

திரைத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 61வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கொடுக்கப்பட்டது. இந்த விருது ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோதே திரைத்துறையை சேர்ந்த பலரும் அவரது ரசிகர்களும் சூப்பர்ஸ்டாருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அவர் விருது பெறும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விருது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் விருதை […]Read More

“மீண்டு வருவோம்”- Captain கோலி நம்பிக்கை !!!

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் எப்பொழுதுமே வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள் ஆகவே அமைந்துள்ளது. அந்த வகையில் டி20 உலக கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் நேற்று பலப்பரீட்சை செய்தது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்காத இந்தியா நேற்றைய போட்டியில் படும் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்தது. 152 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட […]Read More

தடைகளை தட்டி விடாமல் தாண்டிய Smart நாய் !!!

இன்றைய சமூக வலைதளங்களானது குறிப்பிட்ட வசீகரத்தை கொண்ட நாய்களின் வீடியோக்களால் நிரம்பியுள்ளது. செல்லப் பிராணிகளின் முட்டாள் தனமான குறும்புகள் அடங்கிய வீடியோ பதிவுகள் இணையங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனக்கு முன்னால் நீளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை தட்டி விடாமல் அழகாக கடந்து வந்த ஒரு நாயின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. கோல்டன் ரெட்ரீவர் என சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட […]Read More

தோனி சம்பளம் வாங்க போவதில்லை !!!

நடந்து வரும் ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டி20 உலகக் கோப்பை நடக்கவுள்ளது. இந்த உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த அறிவிப்பு கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வந்தபோதே தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். தற்போது இந்த உலகக் கோப்பைக்கு ஆலோசகராக இருப்பதற்காக எந்தவிதமான சம்பளத்தையும் தோனி வாங்கப் போவதில்லை என தெரியவந்துள்ளது. தோனி பணம் […]Read More

IPL 2021-ல் வெற்றிவாகை சூடப்போகும் அணி எது ???

நடந்து வரும் IPL போட்டிகளின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவின்படி டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் Playoff சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பைக்கான இறுதிக்கட்ட போட்டிகளில் பங்கேற்கும். கடைசியாக நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணியை 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை ஈட்டினால் மும்பை playoff சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட சாதனையை மும்பையால் நிகழ்த்த முடியவில்லை. […]Read More