இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது!
- சிலசமயங்களில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்த பதிலாக அமைகிறது.
- விட்டு விலகுவதும் சில நேரத்தில் நல்லதே, அது எதிராளியின் அகம்பாவத்திற்காக அன்றி நம்முடைய சுயமரியாதைக்காக இருக்கும் போது..
- நீங்கள் செய்த கெட்ட விஷயங்கள் உங்களை உறுத்துவதை விட, தகுதியற்றவர்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் அதிகமான உறுத்தலை கொடுக்கும்.
- அறிவு (கல்வி) அதிகாரத்தைத் தான் கொடுக்கும், நடத்தை தான் மரியாதையை கொடுக்கும்.
- மன்னிக்கலாம், அவரின் நிலையை புரிந்தும் கொள்ளலாம், ஆனால் முட்டாளாக இருந்துவிட கூடாது.
- நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அடுத்தவர் தன் தேவையும் மனநிலையையும் வைத்தே உங்களை எடைபோடுவார்.
- என் வாழ்க்கை மற்றவர்களை உற்சாகப்படுத்த மட்டும் கிடையாது.
- சில முட்டாள்களை முட்டாளாக்க நீங்கள் சில சமயங்களில் முட்டாளாக நடிக்க வேண்டியிருக்கும்.
- எல்லோரும் நல்லவர்களை தேடுகிறார்கள், ஆனால் யாரும் நல்லவராக இருக்க விரும்புவதில்லை.
- உணர்வுகளை விட புத்தியை வலிமையாக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
- கடின உழைப்பு மட்டும் போதும் என்றால், கழுதைகள் எல்லாம் எப்பொழுதோ பணக்காரனாகியிருக்க வேண்டும்.
- விரும்புவதற்கு ஒன்றும் இல்லை எனும் போது பயப்படுவதற்கும் தேவை இருக்காது.
- நீங்கள் சிரித்தால் உலகமும் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், நீங்கள் அழுதால் உங்களுடன் சேர்ந்து யாரும் அழமாட்டார்கள்.
- எனக்கு நான் அரசன் என வாழ வேண்டும், இல்லையேல் அரசன் எவனாக இருந்தால் எனக்கென்ன என வாழ வேண்டும்.
- கோபம் என்ற நிலையில் தான் புத்தியை விட நாக்கு வேகமாக செயல்படும். அதுவும் பெருநஷ்டத்தை தான் கொடுக்கும்.
- ஒருவரை அவமரியாதையாக நடத்துவதற்கு பதில் வெறுப்புடன் விலகுவதே மேல்.
‘என் வாழ்க்கையில் கவலை மட்டுமே இருக்கிறது, சோகம் மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது’ என்று புலம்பிக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!
- உண்மையில் இங்கு போட்டியே கிடையாது, ஏனெனில் யாரும் இங்கு உங்களை போல் இருப்பதில்லை.
- வலிமையுள்ளவன் கடக்கும் பாதை கண்டிப்பாக எளிமையான ஒன்றாக இருக்காது.
- பிரிவுக்கு காரணம் ‘தூரம்’ என்ற ஒன்றாக இருக்காது, அது ‘மௌனம்’ என்ற ஒன்றாக இருக்கும்.
- பணம் மற்றும் புகழ் கொண்டு வாழ்வதை விட, கவலை மற்றும் மன அழுத்தம் இன்றி வாழ்வதே சிறந்தது.
- அடுத்தவரின் ரகசியங்களை கூறும் நபரை எக்காலத்திலும் நம்பவேண்டாம்.
- மன உறுதியை வளர்க்க வேண்டுமானால் தனிமையிலும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
- சோர்வானால் ஓய்வெடுக்க வேண்டும், கைவிட கூடாது.
- ஒருவர் பதில் அளிக்கவில்லை என்பதால், அவர் கவனிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
- அடுத்தவர் வெகுமதி தரவில்லை என்பதற்காக உங்களின் சிறந்த செயலை நிறுத்தாதீர்கள்.
- மனது வலிக்கும் போது வாழ்க்கை புதிதாக ஒன்றை கற்று கொடுக்கிறது எனறு அர்த்தம்.
- நீங்கள் தான் பிரச்சனை, நீங்கள் தான் தீர்வு.
- வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு, நீங்கள் ஆட்டத்தை ஆடுபவரா இல்லை பொம்மையா என நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
- சத்தம் வலிமையென்பதும், அமைதி பலவீனமென்பதும் சுத்த பொய்.
- நிதானமான வெற்றிதான் நன்னடத்தையை உருவாக்கும், விரைவான வெற்றி ஆணவத்தையே உருவாக்கும்.
- மெழுகுவர்த்தியை வாங்க சூரியனை விற்றுவிட கூடாது.
- நீங்கள் தான்! நீங்கள் மட்டும் தான் உங்களின் மகிழ்ச்சிக்கு பொறுப்பு, வேறு யாரும் கிடையாது.
- கடைசிகட்டத்தில் எல்லாம் சரியாகிவிடும், எல்லாம் சரியாகவில்லை எனில் அது கடைசிகட்டம் அல்ல.
#படித்ததில்பிடித்தது