• November 5, 2024

Tags :தமிழ் கவிதைகள்

எங்கே? மனித நேயம்!

ஏய் மானிடா!மனித நேயம் ஒன்று இருப்பின்அன்னமாகிய அன்னாசியின் நடுவே,அணுகுண்டு வைப்பாயா?நம்மை நம்பி வந்த தந்தியைநஞ்சிட்டு கொன்றவஞ்சகனே!உன்னை வஞ்சிடவார்த்தைகள் இல்லையடா பாவி! தம்மை நாடி வந்ததால்,நால்வாய் பிளந்து – தன்நாடி இழந்து ,நாட்கள் ஆனதடா துரோகி!ஆடாமல் அசையாமல்,வெள்ளியர் ஆற்றின் நடுவே,ஆழத்தை மறந்து,தன்னோடு தன் கருவையும்,கறுக்கியப் பாவிஎவனோ? ஏய், இயற்கையேஎரித்து விடு அவனை!அவன் சாம்பலும் – கரையாமல்சுற்றி திரியட்டும் ஆவியாய், பாவியாய்!!!Read More

இறைவா! உன்னை வேண்டுகிறேன்!!

விலங்காய் மனிதன் உருவெடுக்க,விலங்கினும் மிஞ்சிய கொடூரனாய்…தன் ஆறாம் அறிவினை மறந்து,அடையாளத்தை துலைத்து,ஆணவத்துடன்,தன் ஆசைக்காக இச்சைகாகபெண் பாலினத்தின் மேல்படையெடுத்த அந்த நோடி… நம்மை நாமே அழித்துக் கொள்ளும்ஓர் இனமாய், வாழ்வதற்குநம் அறிவினை அகற்றிஐந்தறிவுடன், விலங்காய் பறவையாய்தன் இனத்தை காப்பாற்றும்ஓர் அறிய உயிரினமாய்,வீடுதோறும் நன்றியுடன் நாயாய்,பாசத்துடன் பானை வயிற்று யானையாய்,பகுத்துண்டு வாழும் காக்கைகுருவியாய்,உருவம் மாறி உலகினில் வாழ்ந்திட,இறைவா! உன்னை வேண்டுகிறேன் !!!!Read More

உன் கற்பனை உலகில் கணவனாக!

என் அருமை காதலே!ஆசை பைங்கிளியே! அலையாய் வந்து – என்னுள்அன்பினை அளித்தாய்!புயலாய் மாறி – பின்பாச மழைப் பொழிந்தாய்!கடலாய் சென்று – என்கவலைகளைக் கறைத்தாய்!மணிக்கணக்காய் பேசி – எந்தன்மனத்தினைப் பிடித்தாய்! மலையாய் நின்றாய் – பின்மாயமாய் சென்றாய்!ஏனோ! புரியவில்லை – உன்ஆசை உணரவில்லை… என் ஆருயிரே!உன் கரம் பிடிக்க – ஏங்கியதுஎன் மனம் !என்னை மறந்து… என்றும் உன்னுடைய,அழகனாக!உன் அழகை ரசிக்கும்கவிஞனாக!உன் கற்பனை உலகில்கணவனாக!வாழ்க்கைச் சக்கரத்தில்,வலம் வருவேன், ஓர் வழிக்காட்டியாய் !!!Read More

தமிழ்த்தாய் வாழ்த்து

செம்மொழி போற்றுதும்!எம்மொழி போற்றுதும்!நம் விழி போற்றுதுமே!தலைமகள் இவளெனதரணியில் துலங்கிட்டதமிழ் மொழி போற்றுதுமே! மண்மலர் காணும் முன்செம்மொழி கண்டிட்டமண்புகழ் வாழியவே!விசும்பென விழுந்திடும்வியப்பென வெளிப்படும்தண்மொழி வாழியவே! நாவினில் இனித்திடும்ஊனிலும் உறைந்திடும்தேன்மொழி வாழியவே!செந்நீரென உயிர் தரும்வெரெனத் திகழ்ந்திடும்முதன்மொழி இவளல்லவா? மொழிகளுக்கெல்லாம்தாய்மொழி இவளெனப்போற்றிடும் புவியல்லவா?முக்கனியென சுவை தரும்இயல் இசை நாடகமுத்தமிழ் இவளல்லவா? இலக்கிய இலக்கணச்செம்மையில் சிறந்திட்டதனித்துவ மொழியல்லவா?வானையும் விஞ்சியவையக மறை தந்தவள்ளுவத் தாயல்லவா? பண்பாடிடும் பாவலர்பல்லக்கு சுமந்திடபைந்தமிழ் வாழியவே!அரும் கலைகளின் வடிவினில்அறநெறி காட்டிடும்அகத்தியம் வாழியவே! செம்மொழி போற்றுதும்!எம்மொழி போற்றுதும்!நம் விழி போற்றுதுமே!தலைமகள் இவளெனதரணியில் […]Read More

கொள்ளை கொள்ளும் வெள்ளை அழகம்மா நீ!

நிலவே!நீ…இரவின் மகளா?இல்லை ஒளியின் அழகா? உந்தன் வெளிச்சத்தில்வெறுமையை மறந்தேன்.வெளியுலகை வெறுத்து,வேடிக்கையாய், வேறொருபூமிக்கு கொண்டு சென்றாய். உன் வெட்கத்தினால்,விண்மீன்களும் சற்று விலகியது.மின்னலாய் நாள்தோறும் வந்து – எந்தன்மனத்தினை உருக வைத்தாய்! மின்மினியாய் பறந்து – எங்கள்சந்தோஷத்தை சிறகடித்து விட்டாய்!ஓயாமல் ஓடும் வாழ்க்கையில்,ஒய்யாரமாய் ஓர் குடும்பமாய்!! அமர்ந்து பேச, உண்ண, உறங்க,உன்னுள் களைப்பாற – காத்திருந்தோம்!உந்தன் வருகையை எண்ணி ,கொள்ளை கொள்ளும் வெள்ளை அழகம்மா நீ!Read More

கடற்கரையில் ஒரு நாள்!

அவளும் நானும்,சுற்றுலா பயணத்தின் இடையில்சற்றே புறப்படும் சமயத்தில்,ஆசையாய் சென்றோம் ஆர்ப்பரிக்க! அனல் பறக்கும் காற்றும்,சுட்டெரிக்கும் மணலும்,விடியும் வெண்ணிலவும்,தன் விருந்துக்கு வரவேற்க,அலைகளோ !ஒன்றன் மேல் ஒன்றாய்,முந்தி வந்து முத்தமிட,முன்னும் பின்னுமாய் ஓடினோம். ஆடி பாடிடும் மழலைகளும்ஆசை மணல் வீட்டினை கட்ட,அங்கும் இங்குமாய் அலைய,குதித்தோடும் குதிரை சவாரியும்,சுவையூட்டும் சூடான சுண்டலும்,சோர்வினைப் போக்க,இன்னல்களை மறந்த மக்கள்இன்பமாய் – இன்புற்று இருக்க,மெல்லிய பூங்காற்று – மென்மையாய்மேனி மேல் ஊடுறுவ,மெய் சிலிர்த்து நின்றோம்…உன் பேரழகினைக் கண்டு! பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்பிரியா விடைப்பெற்று!!!Read More

கொரோனா போ! போ!

ஏய், கொரோனாவே!சீனாவில் தொடங்கி,சென்னையில் முடிக்கத்தான்,ஆசையோ என்னமோ உனக்கு! என் மக்களை மண்டியிட வைத்து விட்டாயே,உன்னை மறப்பதற்கு.மன்னிப்பே இல்லையடா உனக்கு! கண்ணீர் மல்கிய கூக்குரல்உன் காதிற்கு கேட்கவில்லையா? ஏய், கல் நெஞ்சனே !காயங்கள் வந்தாலும் கலங்காமல்,காற்றினை கிழித்து,காத்தாடியாய் பறந்தோமடா எங்கள் வேலைக்கு.ஆனால் இன்றோ?உன்னால்,வீட்டை விட்டு வெளியேற முடியாமல்,வீணாய் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். சோறு தண்ணி இல்லாமல்,சொந்த ஊருக்கு செல்லாமல்,சொர்க்கமாய் எண்ணி வந்த மக்களைஇந்த மாநகரத்தில்,ஏங்க வைத்துவிட்டாயே! மாலை நேரத் தென்றலை கூடமணம் வீச விடாமல், மயக்கி விட்டாயே!இன்னும் எத்தனை […]Read More

முதுமையும் பிழைதானோ?

உன்னை மகன் என மகிழ்ந்த மனம்தான் இன்று..எண்ணூறு திங்கள் ஆயுளுடன் மரணம் வேண்டி மனுவுடன் முதியோர் முகாமில்… உன்னைப் பெற்ற கணம்‘வெல்லம்’ எனத் திகட்டாத இன்பமும்!நிகழ்கணம் ‘வெள்ளம்’ என விழிக்கெஞ்சலும்,முதுமையும் பிழைதானோ? சரி கடந்தது கரையட்டும்விழி நீரோடு! உன் உயிரணு உயிர் வளர்ப்பில்வஞ்சம் ஒன்றும் வைத்துவிடாதே!தவறினால்..நீயும் முதியோர் இல்ல முகவரி தேடக்கூடும்!! S. Parimaladevi Othakkal Mandapam, CoimbatoreRead More

உன்னால் கவிஞன் ஆனேன்!

மங்கையின் முன்னே மதிமயங்கி நின்றேன்!வஞ்சி அவள் நீசம் வலையினில் விழுந்தேன்!! கண்களை திறந்தே கனவுகள் கண்டேன்!கன்னியே உன்னால் நான் கவிஞனும் ஆனேன்!! எழிலுடன் திரியும் திருமகள் நீயோ!உன் திருமுகம் மலர நானும் மலர்ந்தேன்!!Read More

விஷமாக இல்லாமல், உரமாக இருந்திடுவோம்!

விடியலைத் தேடி நீளும் இரவுகள்,உறங்காமல் மறைவது போல,மழைத் தேடும் மரமாக,மனம் வாடும் நேரங்களில்..விதையாக நாம் விதைத்த பாவங்களின் பலனாக,இயற்கை தரும் பாடங்களைக் கொரோனாவில் காண்கிறோம்! விஷமாக இல்லாமல், உரமாக இருந்திடுவோம்!இயற்கைதனைக் காத்திடுவோம்!!Read More