• April 4, 2024

Tags :Tamil Kavithaikal

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

தமிழனாய் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றும் வாழ்வில் ஒருமுறையாவது படித்துப்பார்க்கவேண்டிய தமிழ் படைப்புகள்! இவை அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது! மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்! தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருவருட்பா திருப்பாவை திருவெம்பாவை திருவிசைப்பா திருப்பல்லாண்டு கந்தர் அனுபூதி இந்த புராணம் பெரிய புராணம் நாச்சியார் திருமொழி ஆழ்வார் பாசுரங்கள் எட்டுத்தொகை – சங்க நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு அகநானூறு புறநானூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை பத்துப்பாட்டு – சங்க நூல்கள் திருமுருகாற்றுப்படை […]Read More

நீயே என் ஓளடதம்!!

எனக்கான உன் நினைவுகள்;வேதாளம் போல முதுகு மீதேறிஅமர்ந்து இறங்க மறுக்கின்றன…! நினைத்து புதைந்து போவதற்கானவரிகள்… எழுத்துக்கள்,லாவகமாக விரல் பிடித்துமார்பின் மீது தலை வைத்துசில்லென்ற ஸ்பரிசம் தொடுக்கின்றன…!! கண்ணீர் துளிகள்…பெருமூச்சுகள்,வாழாத வாழ்க்கையின் தேடல்கள்;யாருமற்ற தனிமையின் உணர்வுகள்;எல்லாவற்றிலும் எனதாகிப்போனவனேதூரத்தில் நின்று ஏன்வேடிக்கை பார்க்கிறாய்…?! என் பொழுதுகளைஆக்கிரமித்துக் கொள்ளும்,மறந்திருந்த…மறைந்திருந்தஉணர்வின் நினைவுகளைதட்டி எழுப்பும்… நீநீயே என் ஓளடதம்!!!Read More

இல்லறம் ஆளும் பெண்ணே!

இல்லறம் ஆளும் பெண்ணே!நீ உன் உறவுகளின் நல்லறம் கருதிஉன்னைத் தொலைப்பது ஏனோ? திருமணம் என்னும் தூண்டிலில் நீ சிக்காமல்,உன் சிறகுகளை விரித்துஉன் திறமையை நோக்கி நீ செல்.. வானவில் உன் வாழ்வில்வண்ணம் தூவதூயவள் நீயும் தலைநிமிர்ந்து செல்..!Read More

உன்னை நீ கேட்டுப்பார்!

மழையில்லாக் காட்டிடம் கேட்டுப்பார்வறட்சியின் வலி தெரியும்! பகையில்லா பிள்ளையிடம் கேட்டுப்பார்அன்பின் மொழிப் புரியும்! வீடில்லா விலங்கிடம் கேட்டுப்பார்வாழ்வின் வேதனை விளங்கும்! வாயில்லா பறவையிடம் கேட்டுப்பார்காற்றின் மொழி புரியும்! நீ உன்னையே கேட்டுப்பார் நீ யாரென்று உனக்கே தெரியும்உன் வலிமையும் புரியும்!Read More

அழகும் பேரழகும்

அழகு மெய்பேசும் விழி அழகு,கவிபாடும் குயில் அழகு,அழியாத தமிழ் அழகு,அறிவான பெண் அழகு! பேரழகு மெய்யாக வாழ வழிச்செய்வது பேரழகு,குயில் பாட மரம் வளர்தல் மெய்யாக பேரழகு,உயிராக தமிழ் காத்தல் பேரழகில் பேரழகு,அறிவான பெண்களுக்கு அனுபவமே பேரழகு! – இரா.கார்த்திகாRead More

மழைத்துளிகளின் நடுவே!

கட்டி இழுத்திடும்,காற்றினில் கரையாமல்…மின்சாரமாய் தாக்கும்,மின்னலில் மிரளாமல்…இருதயமுறைய இடிக்கும்,இடியினில் இடியாமல்…உயிரே…உறவாய்…உன்னைக் கண்டேனடி!மழைத்துளிகளின் நடுவே!! சனோஃபர் எழுத்தாளர்Read More

உங்கள் நண்பரை பற்றி யாராவது உங்களிடம் சொல்லவந்தால், அவர்களிடம் இந்த 3 கேள்விகளை

உங்கள் நண்பரை பற்றி யாராவது உங்களிடம் சொல்லவந்தால், அவர்களிடம் இந்த 3 கேள்விகளை கேளுங்கள்! “என் நண்பன் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா?” “என் நண்பன் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா?” “என் நண்பரைப்பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா?” இந்த மூன்று கேள்விகளும் “ஆம்” என்று சொன்னால் மட்டும், சொல்ல வந்தவரிடம் மேற்கொண்டு பேசுங்கள்.“இல்லை” என்று அவர்கள் சொன்னால், நேரடியாக நீங்கள் பார்க்காத, நல்ல விஷயமுமில்லாத, யாருக்கும் பயனில்லாத என் நண்பரைப் […]Read More

வா இப்படி வாழலாம்!

கல்லையே கரைக்கும் நமதுபேச்சால் கரைப்போம்,உன் தாய், தந்தை, அண்ணனை! காத்திருப்போம்கல்யாணம் செய்வோம்,கண்ணாடி வீடு கட்டிஅண்ணாந்து நிலா பார்ப்போம்! நாம் நிலா மூவர் மட்டும்தினம்தோறும் விழித்திருப்போம்! பைக்கில் பயணம் செய்துதாஜ்மஹாலில் இளைப்பாறுவோம்! விடுமுறைக்கு சுற்றுலா செல்வார்கள்,நாம் உலகம் சுற்றிவிட்டுவிடுமுறைக்கு மட்டும் வீடு வருவோம்! தப்பில்லாமல் சமையல் செய்ய,சில மாதம் எடுத்துக்கொள்வோம்! கதவு இல்லா வாசல் வைத்து,வந்தவர்க்கெல்லாம் உணவளிப்போம்!வாடி நிற்கும் அனைவருக்கும்தேடிச்சென்று உதவி செய்வோம்!! காலையில் இயற்கையோடு ஓட்டம் ஓடுவோம்,மாலையில் கால்பந்துஆடுவோம்! மழை பெய்தால் நனைந்துகொண்டேகாகிதக் கப்பல் விடுவோம்!கை கோர்த்து […]Read More

கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!

கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!வானின் எல்லையை தொட,நீ வழிகளை தேடு! நீ விரும்பும் பாதையைநோக்கி நீ ஓடு!! யார் உன்னைத் தாழ்த்தினாலும்,அதை தவிர்த்து உன் தடத்தை நீ நாட்டு!!! சமானியனாய் வாழ்ந்து மாண்டு போவதை நீ தூக்கிப்போடு..பணம் உன்னை கீழே போட்டாலும்,உன் திறமையே உன்னை தாலாட்டும்..! – இரா.கார்த்திகாRead More

என் கையில் தவழும் கைபேசியே!

என் கண்களைத் திறந்து,இந்த நாட்டின் நடப்பையும்அறிய பல விஷயங்களையும்எனக்குக் கற்றுக் கொடுத்தது நீதான்! என்னைக் கையால் ஆக்கியதும் நீதான்!காதல் ஒன்றால் மட்டும் தான்,ஒரு மனிதனை முழுமனிதனாக்கி முன்னேற்றவும் அழிக்கவும் முடியும்!! நீயே என் காதல் கைபேசியே ! – இரா. கார்த்திகாRead More