• April 26, 2024

Month: December 2021

5 வினாடிகள் உலகம் சுழல்வது நின்றுவிட்டால் என்ன ஆகும் ??

ஒரு மணி நேரத்திற்கு 1600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும் பூமி திடீரென ஒரு ஐந்து வினாடிகளுக்கு சுற்றுவதை நிறுத்தி விட்டால் என்னவாகும் என கற்பனை செய்து இருக்கிறீர்களா. ஒரு வேளை உலகம் சுழல்வது ஐந்து வினாடிகள் நின்று விட்டால் என்னவெல்லாம் ஆகும் என்பதை பற்றிய பதிவுதான் இது. இந்த உலகமானது அண்டத்திற்கு வெளியே ஏற்பட்ட பல்வேறு மூலப்பொருட்களின் மோதலால் சுழற தொடங்கியது. ஒரு நாளைக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் இந்த பூமி பல்வேறு உயிரினங்களின் […]Read More

வலியின்றி தற்கொலை செய்து கொள்ள உதவும் நவீன கருவி !!!

தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு எந்தவித வலியும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான பிரத்தியேக மிஷின் ஒன்றை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நவீன தற்கொலை இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து மருத்துவ வாரியமும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பிரத்தியேக கருவியானது 3d பிரின்டர் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த கருவிக்கு சார்கோ Suicide pods என பெயர் சூட்டியுள்ளனர். தற்கொலை செய்து கொள்ள விரும்புவார்கள் இந்த சாக்கோ சூசைட் பாடிற்குள் சென்று படுத்துக் கொண்டால் போதும். சிறிது […]Read More

கொரோனா வைரஸ் பட்டால் பச்சை வண்ணத்தில் மாறும் அதிசய மாஸ்க் !!

2019ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை கொரோனா ஒட்டு மொத்த உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது. இந்த நோய்க்கு தீர்வு காண பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்களும், வல்லுனர்களும் மக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முகக்கவசத்தில் படர்ந்த உடன் அந்த முக கவசம் ஒளிரும் படியான ஒரு அரிய கண்டுபிடிப்பை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கியோட்டோ பெர்பெக்டுவரல் ( Kyoto Perfectural ) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே இந்த அரியவகை கண்டுபிடிப்பை சாத்திய படுத்தியுள்ளனர். இவர்கள் […]Read More

ஜல்லிக்கட்டு தடையா? நம்மை சீண்டிப்பார்க்கும் வடஇந்தியர்கள்

மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட பந்தயங்களுக்கு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக அந்த தடை அகற்றப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் விளைவாக ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், எருது விரட்டு, மாடு வடம் பிடித்தல் ஆகியவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு […]Read More

மது அருந்தியவுடன் நமக்கு என்னவெல்லாம் ஆகும் ??

மது அருந்தி விட்டால் ஒரு மனிதன் தடுமாற்றம் இல்லாமல் நிலையாக இருப்பது கடினம். மதுவை அருந்தியவுடன் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. முதலில் மதுவை அருந்திய பின் அது சாதாரண குளிர்பானங்களை போலவோ, உணவுப்பொருட்களை போலவோ நமக்கு ஜீரணமாகாது. அதற்கு பதில் நாம் அருந்திய மதுவானது நமது ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இப்படி ரத்த ஓட்டத்தில் கலக்கும் மது முதலில் நமது மூளையை சென்றடையும். […]Read More

இது நரியா நாயா ? விசித்திர விலங்கின் கதை !!!

நரி வகையிலேயே மிகவும் சிறிய நரியான பென்னெக் நரி (Fennec Fox) எனப்படும் cute-ஆன நரியைப் பற்றிய பதிவுதான் இது. இந்த வகை நரிகள் வட ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதிகளில் வசிப்பவை ஆகும். பார்ப்பதற்கு ஒரு அழகிய நாயைப் போல காட்சியளிக்கும் இந்த நரி எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், மனிதர்களுடன் கொஞ்சி விளையாடும் தன்மையையும் பெற்றது. என்னதான் மனிதர்களுக்கு நண்பனை போல இந்த நரி காட்சியளித்தாலும் இந்த பென்னெக் நரி ஒரு காட்டு விலங்கு தான். மற்ற […]Read More

2027 முதல் புகைபிடிக்க தடை ! அதிரடி சட்டம் !

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என திரைப்படங்களிலும் சிகரெட் பாக்கெட்டுகளிலும் பார்த்திருப்போம். அப்பேர்ப்பட்ட தீங்கு விளைவிக்கும் சிகரெட்டை 2027ஆம் ஆண்டு முதல் 14 வயதுக்குட்பட்ட எவரும் புகைபிடிக்கக் கூடாது எனும் புதிய சட்டத்தை நியூசிலாந்து அரசாங்கம் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே 18 வயதுக்குட்பட்டோர் அந்த நாட்டில் புகைபிடிக்கக் கூடாது எனும் சட்டம் இருந்தாலும், கடைக்கு சென்று சிகரெட்டை யார் வேணுமானாலும் வாங்கிக் கொள்ளும் நிலையே இருந்து வந்தது. வருங்காலத்தில் நாட்டை புகையில்லா நாடாக மாற்ற நியூசிலாந்து அரசாங்கம் […]Read More

பூஜை போட்டு செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் !!!

வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளை மனிதர்களைப்போல மதித்து பாசம் காட்டும் எத்தனையோ மனிதர்களை பார்த்திருப்போம். தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை நடத்தி வாழ்த்து தெரிவித்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் Sofa-வில் அழகாக படுத்திருக்கும் நாய்க்கு பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி ஆரத்தி காண்பித்து, வாழ்த்து மந்திரங்களை ஓதி பிறந்தநாள் வாழ்த்துக்களை அந்த நாயை வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாயின் பெயர் கோபி என்றும் வளர்ப்பவரின் பெயர் […]Read More

ஒரு நாள் போட்டிகளுக்கும் கேப்டன் ஆனார் ரோஹித் ஷர்மா !!!

டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இனி வரும் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து ரோஹித் சர்மாவுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். ரோஹித் ஷர்மா […]Read More

இறந்து போன பிபின் இராவத் அவர்களின் பதவி எப்பேற்பட்டது தெரியுமா ??

இந்தியாவின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமை படைத்தலைவர் பிபின் இராவத் இன்று குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிபின் இராவத், அவரது மனைவியுடன் சேர்த்து 13 பேர் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிபின் இராவத்-ன் இறப்பு இந்திய ராணுவத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட MI 17 உலங்கு ஹெலிகாப்டரில், குன்னூரில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெல்லிங்டனில் இருக்கும் ராணுவ பணியாளர் பயிற்சிக் […]Read More